சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி... சூடு பிடிக்கும் அரசியல் களம்..! பிரம்மாண்ட பொதுக்கூட்டம்..!
மதுராந்தகத்தில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தனி விமான மூலம் பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று பிரம்மாண்டமான பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பாகக் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இந்தக் கூட்டம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு என்டிஏ கூட்டணியின் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கும் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.
மதுராந்தகம் சென்னை-திண்டிவனம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இடத்தில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலிருந்தும் இருந்து ஏராளமான தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 5 லட்சம் பேர் வரை கலந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக தனி விமானம் மூலம் பிரதமர் மோடி சென்னை வருகை தர உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. மதியம் 2.15 மணி அளவில் பிரதமர் மோடி சென்னை வருவார் என்று கூறப்பட்டது. ஆனால் பிரதமர் மோடியின் வருகை தாமதமானது. கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்.
இதையும் படிங்க: MGR..! மகத்தான பங்களிப்பு... தொலைநோக்குப் பார்வை... புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி..!
அங்கிருந்து சென்னை வருவதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். அங்கிருந்து விழா நடைபெறும் படத்திற்கு பிரதமர் மோடி புறப்படுகிறார். சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் ரவி, அமைச்சர் அன்பரசன் உள்ளிட்டோ வரவேற்றனர். ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மதுராந்தகத்திற்கு செல்கிறார்.
இதையும் படிங்க: மத்திய அரசு தமிழகத்திற்கு இழைத்த துரோகங்கள்... லிஸ்ட் போட்ட DMK..!