மகளிருக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும்... ஜாக்பாட் அறிவிப்பை வெளியிட்ட பிரதமர் மோடி...!
தேர்தல் பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது.
மேற்கு வங்கத்தில் 2-ம் கட்ட வாக்குப்பதிவுக்கான பரப்புரைகள் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், கொல்கத்தாவில் நேற்று பிரதமர் மோடி சாலைவலம் மேற்கொண்டார்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவித்திருந்த நிலையில், முதல்கட்ட வாக்குப்பதிவு 152 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் நடந்து முடிந்திருக்கிறது. இதில், மேற்கு வங்கத் தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக சுமார் 93.2 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. இந்தசூழலில் தான், மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கான, தேர்தல் பரப்புரைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவு பெறுகிறது.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான பாஜக இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கு வங்காளத்தில் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சி அமைந்தால், பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 நிதியுதவி வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
இதையும் படிங்க: கங்கை ஆற்றில் பயணித்த பிரதமர் மோடி..! சிறப்பான இடத்தைப் பிடித்தது... நெகிழ்ச்சியுடன் பதிவு..!
வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் பாங்காவோன் தொகுதி பாஜக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்த மோடி, “மாத்ரி சக்தி போரோசா அட்டை” நிதியுதவித் திட்டத்தின் மூலம் பெண் பயனாளிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.36,000 வழங்கப்படும். கூடுதலாக உயர்கல்வி பயிலும் இளம் பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகையும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூ.21,000 உதவித்தொகையும் வழங்கப்படும் என அறிவித்தார்.
மேலும் சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அளிக்கப்படும் ஆதரவு வெற்றிக்கான அறைகூவல் என தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரசின் கொடுங்கோல் ஆட்சியால் மேற்குவங்கத்தில் ஜனநாயக கோயில் தனது புனிதத்தை இழந்தது என்றும், முதல்கட்ட வாக்குப்பதிவில் மக்கள் ஜனநாயக கோவிலை மீண்டும் கட்டியெழுப்பிவிட்டனர் எனவும் கூறியுள்ளார். மேலும், மேற்குவங்கத்தில் ஒவ்வொரு மகளின் கனவுகள் நசுக்கப்படுவதை பாஜக அனுமதிக்காது எனக்கூறிய பிரதமர் மோடி, பாஜக அரசு அமைந்தவுடன் ஒவ்வொரு அநீதிக்கும் பாடம் கற்றுத்தரப்படும் என உத்தரவாதம் அளித்தார்.
இதையும் படிங்க: மோடியின் உண்மையான எதிரி அம்பேத்கர்... தேர்தல் பரப்புரையில் டென்ஷன் ஆன திருமாவளவன்...!