×
 

5 வருஷம்.. 33 வெளிநாட்டு பயணம்.. மலைக்க வைக்கும் பிரதமர் மோடியின் செலவு கணக்கு!

2024-ல மோடி 145 அதிகாரிகளோட 16 நாடுகளுக்கு பயணம் செஞ்சிருக்கார், 2025-ல இதுவரை ஏழு நாடுகளுக்கு 11 முதல் 16 பேர் கொண்ட குழுவோட பயணிச்சிருக்கார். 

பிரதமர் நரேந்திர மோடியோட வெளிநாட்டு பயணங்கள் கடந்த சில வருஷங்களா பேசுபொருளா இருக்கு. 2021-ல இருந்து 2024 வரை, மோடி 33 வெளிநாடுகளுக்கு 38 பயணங்களை மேற்கொண்டதுக்கு மொத்தமா சுமார் 295 கோடி ரூபா செலவாகியிருக்குனு மத்திய அரசு ராஜ்யசபாவுல தெரிவிச்சிருக்கு. 

இந்த 2025-ல மட்டும், ஐந்து நாடுகளுக்கு (பிரான்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து, இலங்கை, சவுதி அரேபியா) பயணம் செஞ்சதுக்கு 67 கோடி ரூபா செலவு ஆகியிருக்கு. இதுல பிரான்ஸ் பயணம் மட்டும் 25.59 கோடி ரூபானு, அதுதான் இந்த வருஷத்துலயே மொத அதிக செலவு.

இந்த தகவலை வெளியுற வெளியுற விவகார அமைச்சகத்தோட இணை அமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரெக் ஓ’பிரையனோட கேள்விக்கு பதிலா ராஜ்யசபாவுல தாக்கல் பண்ணியிருக்கார். 2024-ல மட்டும் 16 நாடுகளுக்கு பயணம் செஞ்சதுக்கு 109 கோடி ரூபா, 2023-ல 93 கோடி, 2022-ல 55.82 கோடி, 2021-ல 36 கோடி செலவு ஆகியிருக்குனு விவரமா சொல்லியிருக்காங்க. 

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் தரமான செய்கை.. மொத்தமாக சரண்டர் ஆன மாலத்தீவு! இனி வாலாட்டுவீங்க!!

இதுல, 2023-ல அமெரிக்காவுக்கு ஜூன் மாசத்துல செஞ்ச பயணம் 22.89 கோடி ரூபாவோட மிக அதிக செலவு ஆன பயணமா இருக்கு. இந்த பயணங்களோட செலவு விவரங்களைப் பார்க்கும்போது, ஹோட்டல், போக்குவரத்து, பாதுகாப்பு, ஊடகக் குழு, சமூக நிகழ்ச்சிகள்னு பல தலைப்புகளுக்கு கீழ செலவு ஆகியிருக்கு. 

உதாரணமா, 2023-ல எகிப்து பயணத்துக்கு விளம்பரம் மற்றும் ஒளிபரப்புக்கு மட்டும் 11.90 லட்சம் செலவு செய்யப்பட்டிருக்கு. 2024-ல மோடி 145 அதிகாரிகளோட 16 நாடுகளுக்கு பயணம் செஞ்சிருக்கார், 2025-ல இதுவரை ஏழு நாடுகளுக்கு 11 முதல் 16 பேர் கொண்ட குழுவோட பயணிச்சிருக்கார். 

இதுல மொரிஷியஸ், சைப்ரஸ், கனடா, குரோஷியா, கானா, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா பயணங்களோட செலவு விவரங்கள் இன்னும் இறுதியாகல, “பில்கள் செட்டில் ஆகுறதுக்கு காத்திருக்கோம்”னு அரசு சொல்றாங்க.

இந்த செலவுகள் பற்றி X-ல பலரும் பேசுறாங்க. சிலர், “மோடியோட பயணங்கள் இந்தியாவோட உலகளாவிய செல்வாக்கை அதிகரிக்குது, பொருளாதார ஒப்பந்தங்கள், பாதுகாப்பு ஒத்துழைப்பு மாதிரி முக்கியமான விஷயங்களுக்கு வழி வகுக்குது”னு ஆதரிக்கறாங்க. 

ஆனா, எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், “இவ்வளவு செலவு செய்யுறது தேவையா? உள்நாட்டு பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாமே”னு விமர்சிக்கறாங்க. “254 கோடி ரூபா செலவு பண்ணி, மணிப்பூர் பிரச்சினையை விட வெளிநாட்டு பயணங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்குறாரு”னு குற்றம்சாட்டியிருக்காங்க. 

மோடியோட பயணங்கள், இந்தியாவை உலக அரங்கத்துல முன்னிறுத்தி, G20, G7 மாநாடுகள், பிரான்ஸ் அதிபர் மேக்ரான், அமெரிக்க அதிபர் டிரம்ப் மாதிரியான தலைவர்களோட பேச்சுவார்த்தைகளுக்கு வழிவகுத்திருக்கு.

ஆனாலும், இந்த செலவுகள், உள்நாட்டு பொருளாதார சவால்கள், வேலையின்மை, பள்ளிக் கட்டமைப்பு பிரச்சினைகள் மாதிரியான விஷயங்களுக்கு மத்தியில, பார்லிமென்ட்டுலயும், மக்கள் மத்தியிலயும் விவாதத்தை கிளப்பியிருக்கு. 

இந்த செலவு விவரங்கள், இந்தியாவோட வெளியுறவு கொள்கையோட முக்கியத்துவத்தையும், அதே சமயம் உள்நாட்டு முன்னுரிமைகளை பேலன்ஸ் பண்ண வேண்டிய அவசியத்தையும் காட்டுது.

இதையும் படிங்க: ஆட்சி, அதிகாரத்தில் புதிய மைல்கல்.. இந்திரா காந்தியை முந்தினார் பிரதமர் மோடி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share