×
 

தேர்தல் களம் சூடுபிடிக்குது... பாண்டிய நாட்டில் கால்பதிக்கும் பிரதமர் மோடி!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடியின் மார்ச் 1-ஆம் தேதி பயணத் திட்டம் பாண்டிய நாட்டின் மையப்பகுதியான மதுரையை மையமாக கொண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் அனல் பறந்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இரண்டு நாள் பயணமாகத் தமிழகம் வரவுள்ளார். குறிப்பாக, தென் மாவட்டங்களில் பாஜக-வின் செல்வாக்கை உயர்த்தும் வகையில் பாண்டிய நாட்டின் மையப்பகுதியான மதுரையில் அவர் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.

பிப்ரவரி 28-ஆம் தேதி இரவு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் பிரதமர் மோடி, அன்று இரவு சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுக்கிறார். மார்ச் 1-ஆம் தேதி காலை 10:30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லும் பிரதமர், அங்குள்ள ஏர்போர்ட் மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். மார்ச் 1 பிற்பகல் 2 மணியளவில் ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்திற்கு வரும் பிரதமர், அங்கிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்குச் சென்றடைகிறார்.

மதுரையில் நடைபெறும் பிரம்மாண்டமான தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். மாலை 4 மணியளவில் வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்குச் சென்று பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார்.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... புயல் வேகத்தில் தொகுதி பங்கீடு...! வரும் 27 ஆம் தேதி DMK - CPI பேச்சுவார்த்தை..!!

தனது பயணங்களை முடித்துக்கொண்டு மாலை 6 மணியளவில் மதுரை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் மீண்டும் டெல்லி புறப்படுகிறார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு மதுரை மற்றும் புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுராந்தகம் மாநாடு மற்றும் ராமேஸ்வரம் கோவில் தரிசனம் போன்ற அவரது முந்தைய பயணங்களைத் தொடர்ந்து, இந்த மதுரை வருகை அரசியல் ரீதியாகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: நாளை ஒரு நல்ல தகவல் வரும்! ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா உருக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share