×
 

CMDA திவாலானது ஏன்.? வெள்ளை அறிக்கை கொடுங்க..! அன்புமணி வலியுறுத்தல்..!!

சிஎம்டிஏ திவால் ஆனது ஏன் என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தின் தலைநகர வளர்ச்சியை ஒழுங்குபடுத்தும் முக்கிய அமைப்பான சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அடுத்த மாத ஊதியம் வழங்குவதற்கு கூட பணமின்றி திவாலான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 54 ஆண்டு கால வரலாற்றில் இல்லாத அளவுக்கு அடிப்படை செலவுகளுக்கு அரசிடம் கையேந்தும் நிலைக்கு சிஎம்டிஏ தள்ளப்பட்டது ஏன் என்பதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், செயல்பாடுகள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் தனது அறிக்கையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளின் நகர்ப்புற வளர்ச்சியை வழிநடத்தும் பொறுப்பு சிஎம்டிஏவுக்குத்தான் என்று சுட்டிக்காட்டினார். சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாநகராட்சிகள், 12 நகராட்சிகள் மற்றும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களில் சுமார் 5,904 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நிலப்பயன்பாடு மற்றும் கட்டுமான அனுமதிகளை வழங்கும் அதிகாரம் கொண்ட அமைப்பு இது. 1972-ஆம் ஆண்டு மதராஸ் பெருநகர வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு நீண்ட காலமாக தன்னிறைவுடன் செயல்பட்டு வந்தது. ஆனால், கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் அதன் நிதி நிலை முற்றிலும் சீரழிக்கப்பட்டுவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

ஜூலை மாத ஊதியம் உள்ளிட்ட உடனடி செலவுகளுக்கு நிதி இல்லாததால், தமிழக அரசுக்கு ரூ.200 கோடி மானியம் கோரி சிஎம்டிஏ கடிதம் எழுதியுள்ளது. இதன் மூலம் அமைப்பின் அவல நிலை வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது சிஎம்டிஏவுக்கு சுமார் ரூ.3,500 கோடி அளவுக்கு கடன் பொறுப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இயல்பான செயல்பாட்டில் இத்தகைய பெரும் சுமை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்று டாக்டர் அன்புமணி சுட்டிக்காட்டினார்.முந்தைய திமுக ஆட்சியில் சிஎம்டிஏ மூலம் சென்னையில் ரூ.3,000 கோடிக்கு மேல் உட்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தப் பணிகளே அமைப்பின் நிதி நெருக்கடிக்கு முக்கிய காரணம் என்று அவர் விளக்கினார்.

இதையும் படிங்க: பாமக நிறுவனர் ராமதாஸுடன் அன்புமணி ராமதாஸ் நேரில் சந்திப்பு: 45 நிமிடங்கள் நீடித்த அவசர ஆலோசனை!

சிஎம்டிஏவின் முதன்மைப் பணி கட்டுமான அனுமதிகள் வழங்குவது மட்டுமே. அதற்கான சிறிய கட்டணங்கள் மூலம் வரும் வருவாயை கொண்டு ஊழியர்கள் ஊதியம், நிர்வாகச் செலவுகளை சமாளித்து வந்தது. கடந்த 54 ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இயங்கிய அமைப்புக்கு, உட்கட்டமைப்புப் பணிகளின் சுமை சுமத்தப்பட்டதன் விளைவே இந்த நிலை என்று அவர் கூறினார்.உட்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய பொறுப்பு தமிழக அரசு மற்றும் மாநகராட்சிகளுக்குரியது. ஆனால், சிஎம்டிஏ போன்ற ஒழுங்குமுறை அமைப்பின் மீது இந்தப் பொறுப்பை சுமத்தியது, அதன் நிதியை கொள்ளையடிக்க நடந்த சதி என்று டாக்டர் அன்புமணி கடுமையாக விமர்சித்தார். முந்தைய ஆட்சியின் கடைசி காலத்தில் ஊழல் உச்சக்கட்டத்தை எட்டியதாகவும், எந்த எல்லைக்கும் செல்ல துணிந்ததாகவும் அவர் சாடினார்.

இதையும் படிங்க: எடப்பாடி சொத்துக்கு குறி வைத்த செங்கோட்டையன்... முதலமைச்சர் காதுகளை எட்டப்போகும் முக்கிய விவகாரம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share