×
 

நான் துரோகம் செய்ய மாட்டேன்! சீக்கிரமே ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு... ஜி.கே. மணி உறுதி..!

ராமதாசும், அன்புமணியும் விரைவில் சந்தித்து பேசுவார்கள் என ஜி கே மணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி பூசல் நிலவுகிறது. குறிப்பாக ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே முதல் முற்றுவதாக தெரிகிறது. தன்னை கட்சியின் தலைவர் என அன்புமணி கூறுவதும், அவரை செயல் தலைவர் என ராமதாஸ் குறிப்பிடுவதும் நிகழ்ந்து வருகிறது. நேற்று நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை. அன்புமணிக்கு ஆதரவாக அவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாமகவின் கௌரவ தலைவர் ஜிகே மணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ராமதாஸ் மற்றும் அன்புமணிகளையே அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறினார். விரைவில் பாட்டாளி மக்கள் கட்சிகள் சுமுகமான சூழல் திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தான் ஒருபோதும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன் எனக் கூறிய ஜி.கே. மணி, சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துக்களை பகிர வேண்டாம் என தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படிங்க: பாமகவை சல்லி, சல்லியாய் நொறுக்கும் ரெண்டு மணிகள்... சோசியல் மீடியாவில் வெடித்தது உரிமைப்போர்!

நேற்று இரவு முழுவதும் ராமதாசுடன் பேசிக் கொண்டிருந்ததாகவும், தற்போதும் கட்சி விவகாரம் குறித்து பேசி இருப்பதாகவும் தெரிவித்தார். நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக முழு முயற்சி எடுத்து வருவதாகவும் விரைவில் ராமதாசும் அன்புமணியும் சந்திப்பார்கள் என்றும் தெரிவித்தார்.  சட்டமன்ற தேர்தல் குறித்து பேசிய அவர், என்ன கூட்டணி யாருடன் கூட்டணி என்பது குறித்து தற்போது தெரிய வராது என்றும் தேர்தல் நெருங்கும் சமயத்தில் தான் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: அத்துமீறும் பாகிஸ்தான்! மீறப்படும் அமைதி ஒப்பந்தம்... இந்திய ராணுவ அதிகாரிகள் விளக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share