×
 

அன்புமணி வீடு தேடி சென்ற அந்த இருவர்.. பாமகவில் உச்சக்கட்ட பதற்றம்..!

அடுத்தடுத்து ஆலோசனைகள் நடைபெறும் நிலையில் தற்போது பாமக தலைவர் அன்புமணியுடன் இரண்டு எம்எல்ஏக்கள் சந்தித்து பேசி இருக்கின்றனர். 

பாமகவில் தந்தை மகனுக்கு கருத்து மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், அன்புமணி ராமதாஸ் அந்த கட்சி நிர்வாகிகளை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து இன்றும் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்பொழுது அவர்களுக்கு அடையாளவட்டையும் வழங்கப்பட்டது. 


அப்பொழுது பேசிய அவர் கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகிய மூன்று நபர்களையும் பொதுக்குழு, செயற்குழு கூடி தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் இவர்களை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என்றெல்லாம் நேற்று அந்த கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அதை தொடர்ந்து இன்று தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ்  இரண்டு மாவட்ட நிர்வாகிகளை அழைத்து ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். உடன் ஆடிட்டரும் அங்கு ஆலோசனையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. அதேபோல வன்னியர் சங்க முன்னாள் நிர்வாகிகளோடும் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். 

மற்றொருபுறம் சென்னை பனையூரில் அக்கரையில் உள்ள அன்புமணி ராமதாஸ் வீட்டிற்கு சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சதாசிவம், அதேபோல் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகியோர் சந்தித்துள்ளனர். இரண்டு பேரும் தங்களது ஆதரவை அன்புமணிக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அன்புமணியின் கை ஓங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் இருவர் அவரை வீடு தேடி சந்தித்துள்ளது பாமகவில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: மாறியது பாமக அலுவலக முகவரி.. முழுவீச்சில் இறங்கிய அன்புமணி ராமதாஸ்..!

இதையும் படிங்க: எனது அணியை வீழ்த்த சூழ்ச்சி நடக்கிறது.. அன்புமணி பகிரங்க குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share