×
 

ஆர்ப்பாட்டத்தில் அட்ராசிட்டி.. பாமகவினர் மீது அடுத்தடுத்து பாய்ந்தது 3 வழக்குகள்..!

போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடும் நிலையில், பாமகவினரை சமாளிக்க முடியாமல் மீண்டும் போராட்டம் நடைபெறும் சாலை வழியாகவே, அவர்களது வாகனங்களை போலீசார் மீண்டும் அதே பாதையில் திருப்பிவிட்டனர். 

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு 1200 நாட்களுக்கு மேலாகியும், இதுவரை 10.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்காத தமிழக அரசைக் கண்டித்தும், உடனடியாக வன்னியர் இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தியும், விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடல் மைதானத்தில்  பாமக சார்பில்  தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆர்பாட்டம்  நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரி மாநிலத்திலிருந்தும் பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் வாகனங்களில் அணிவகுத்து வந்து கொண்டிருக்கின்றனர். இந்தநிலையில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம்  ரவுண்டானா பகுதியில் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட போலீசார்,  போராட்டம் நடைபெறும் சாலையில் வாகனங்கள் அதிகரித்து, இடமில்லாத காரணத்தினால் ஜானகிபுரம் ரவுண்டானா பகுதியிலிருந்து எல்லிஸ்சத்திரம் சாலை வழியாக, பாமகவினர் வரும் வாகனங்களை போலீசார் திருப்பிவிட்டு வருகின்றனர். 

அப்பொழுது பாமகவினர் வாகனங்கள் அதிகம் வந்த நேரத்தில், எங்களை போராட்டம் நடைபெறும் சாலை வழியாக அனுமதிக்காமல், எப்படி வேறு வழியாக திருப்பி விடலாம் எனக்கூறி, சில தொண்டர்கள்  ஆத்திரமடைந்து, போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபடும் நிலையில், பாமகவினரை சமாளிக்க முடியாமல் மீண்டும் போராட்டம் நடைபெறும் சாலை வழியாகவே, அவர்களது வாகனங்களை போலீசார் மீண்டும் அதே பாதையில் திருப்பிவிட்டனர். 

இதையும் படிங்க: கட்சி கட்டுப்பாட்டு மீறல்! பாமக எம்எல்ஏக்கள் 3 பேர் சஸ்பெண்ட்! ராமதாஸ் அதிரடி அறிவிப்பு

இதனிடையே, புதிய பேருந்து நிலையம் அருகே பேருந்து நிறுத்தத்தின் மேல் வைக்கப்பட்டிருந்த திமுக பேனரை ஆர்ப்பாட்டத்தில் வந்த பாமகவினர் பாமக கட்சி கொடி கம்பத்தால் அடித்து பேனரை கிழித்து சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. பாமக ஆர்பாட்டத்தின் போது திமுக பேனரை கிழித்ததால் திமுக வழக்கறிஞர் சிவா கொடுத்த புகாரின் பேரில் பாமக வினர் 20 பேர் மீது விழுப்புரம் தாலுக்கா காவல் நிலைய போலீசார் 4 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

இதேபோன்று அரசு பேருந்து  மீது ஏறி பாமக கொடியுடன் போக்குவரத்துக்கு இடையூறு செய்து பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடனம் ஆடிய பாமக வினர் 50 பேர் மீது விழுப்புரம் தாலுக்கா போலிசார் 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

அதேபோன்று அனுமதியின்றி சாலையோரம் பதாகை வைத்த பாமக மாவட்ட செயலாளர் பாலசக்தி, பாமக ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், செந்தில், தியாகராஜான், பாலகிருஷ்ணன் அகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

இதையும் படிங்க: சமூக நீதி பற்றி திமுக பேசலாமா? வன்னியர்களுக்கு துரோகம் செஞ்சுட்டாங்க! அன்புமணி ஆவேசம்…

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share