×
 

சமூக நீதி துரோகி திமுக! அன்புமணி தலைமையில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்!

10.5 % இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த கோரி விழுப்புரத்தில் அன்புமணி தரப்பு பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2021 நவம்பர் 1 அன்று, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் கே.முரளிசங்கர் ஆகியோர் வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிட்டனர். முறையான தரவுகளின் பற்றாக்குறை: இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முறையான சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அரசு வழங்கிய விளக்கங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிமன்றம் கருதியது. மேலும், ஒரு குறிப்பிட்ட சாதிக்கு மட்டும் இட ஒதுக்கீடு வழங்குவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மாநில அரசு இத்தகைய உள் இட ஒதுக்கீட்டை வழங்குவதற்கு உரிய அதிகாரம் உள்ளதா என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மற்றும் பா.ம.க உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. உச்ச நீதிமன்றம், இந்தச் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்து, மாநில அரசு உரிய தரவுகளைச் சேகரித்து மீண்டும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று தெளிவுபடுத்தியது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, தமிழக அரசு ஒரு ஆணையத்தை அமைத்து, சாதி வாரி கணக்கெடுப்பு மற்றும் தரவு சேகரிப்பு பணிகளை மேற்கொள்ள முடிவு செய்தது. 2022 ஏப்ரல் 7 அன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில், உரிய தரவுகளைச் சேகரித்து வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதையும் படிங்க: ஒருவழியா சுபம் போட்டாச்சு! ராமதாஸ் - அன்புமணி சமாதானம்!! PMK தொண்டர்கள் ஹாப்பி அண்ணாச்சி!!

ஆனால், 10.5% இடஒதுக்கீடு உத்தரவை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறி பாமகவினர் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அன்புமணி தரப்பு பாமக சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 10.5 % உள் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக் கோரி பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சமூக நீதி துரோகி திமுக உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் முழக்கங்களை எழுப்பினர். இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறி 1208 நாட்களைக் கடந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் கூறியும் திமுக அரசு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தர மறுப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இதையும் படிங்க: காமராஜர் சர்ச்சை.. திமுக மன்னிப்பு கேட்டே ஆகணும்..! அன்புமணி கறார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share