பாமக நிறுவனர் ராமதாஸை உலுக்கிய சோகம்... பெரும் அதிர்ச்சியுடன் தமிழக அரசுக்கு கோரிக்கை...!
கடலூரைச் சேர்ந்த பாமக நிர்வாகி மின்சாரம் தாக்கி உயிரிழந்த செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சி அடைந்ததாக பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
வயல்வெளியில் மின்சாரம் தாக்கி பா.ம.க. நிர்வாகி- விவசாயி செல்வம் மரணம், பெரும் அதிர்ச்சி. உரிய இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடலூர் மேற்கு மாவட்டம், கம்மாபுரம் ஒன்றியம், புவனகிரி தொகுதி, சாத்தப்பாடி கிராமத்தின் வயல்வெளியில் அறுந்து விழுந்த மின்சார வயரை மிதித்த விவசாயி செல்வம் (59) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார். இறந்து போன செல்வம் மனைவியை இழந்தவர். இரண்டு பிள்ளைகளை படிக்க வைக்க போராடிக் கொண்டிருந்தவர். சாத்தப்பாடி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியை வளர்த்தெடுக்க அரும்பாடு பட்டவர் செல்வம் ஆவார்.
வயல்வெளியில் மின்சார வயர்கள் அறுந்து விழுந்து கிடப்பதை பலமுறை இறந்துபோன செல்வமும், சாத்தப்பாடி கிராம மக்களும் உள்ளூர் மின்வாரிய அதிகாரிகளுக்கும்; லைன் மேன் என சொல்லப்படும் மின்வாரிய களப் பணியாளருக்கும் தகவல் தெரிவித்தும் கூட; அதை பொருட்படுத்தாமல் போனதன் விளைவாக நேற்று செல்வத்தை இழந்துள்ளோம். மின்வாரிய களப்பணியை முறைப்படி மேற்கொள்ளாமல் உயிரிழப்புக்கு காரணமான ஊழியர் மீதும்; அவரை வழி நடத்தாத அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த பா.ம.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இதையும் படிங்க: அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்... என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்பு...!
செல்வம் குடும்பத்துக்கு 50 லட்சரூபாய் இழப்பீடும் செல்வம் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் உடனடியாக வழங்கி, செல்வம் குடும்பத்தை காப்பாற்றி கரைசேர்க்க உதவுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோரிக்கையை முன் வைக்கிறேன்.
இதையும் படிங்க: நேரில் ஆஜரான அன்புமணி... காணொலியில் ராமதாஸ் - நீதிபதி முன்பு நடந்தது என்ன?