ம.க.ஸ்டாலின் கொலை முயற்சி வழக்கில் அதிரடி திருப்பம்... குண்டுவீச ரூட்டு போட்டுக் கொடுத்த 2 பேர் கைது
ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் மேலும் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்காக உயந்துள்ளது.
கடந்த ஐந்தாம் தேதி ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் அதன் தலைவர் ம.க .ஸ்டாலினை மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக ம.க. ஸ்டாலின் உயிர்த்தப்பினார்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க ஆறு தனி படைகள் அமைக்கப்பட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சேலத்தில் பதுங்கி இருந்த மருதுபாண்டி மற்றும் மகேஷ் ஆகியோரே காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்த இருவரையும் இன்று இரவு பாபநாசத்தில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: அதிமுக கூட்டத்தைக் கலைக்கவே ஆம்புலன்ஸ் விடுறாங்க... திமுகவை வெளுத்து வாங்கிய எடப்பாடி பழனிசாமி...!
இன்று திருவிடைமருதூரைச் சேர்ந்த சேரன் (வயது 27) மற்றும் சஞ்சய் (வயது 22 ) ஆகிய இருவரை திருவிடைமருதூர் காவல்துறையினர் கைது செய்து திருவிடைமருதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.
இன்று கைது செய்யப்பட்ட இருவரும் வெடிகுண்டு வீச, எந்த வழியாக வரவேண்டும் என்பதை திட்டமிட்டவர்கள் என்று கூறப்படுகிறது. ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் இதுவரை 4 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய நபர்களை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம்; மணமக்களுக்கு பட்டு சேலை, வேஷ்டி - அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட இபிஎஸ்...!