×
 

அந்த முதியவர் மேல தான் தப்பு! அவரை அமைதிப்படுத்தவே முயற்சித்தோம்... காவல்துறை விளக்கம்

திருப்பத்தூரில் முதியவரை SI தள்ளிவிட்ட விவகாரம் குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

VAO வை தாக்கியதுடன் அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததால் தான், உங்களுடன் ஸ்டாலின் முகாமில் SI முதியவரை குறைந்த அளவு பலத்தைக் கொண்டு அமைதிப்படுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் மக்கள் நலத் திட்டங்களில் ஒன்றான உங்களுடன் ஸ்டாலின் இத்திட்டத்தின் மூலம், மக்களின் கோரிக்கைகளையும் புகார்களையும் நேரடியாகப் பெற்று, அவற்றை விரைவாகவும் வெளிப்படையாகவும் தீர்க்க அரசு முயற்சித்து வருகிறது. இவை நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இதில் 13 அரசு துறைகள் மூலம் 43 வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஆற்காட்டில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு அளிக்க வந்தவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடபதி என்ற முதியவர் மனு கொடுத்துவிட்டு ரசீது கேட்டுள்ளார். அவரை வருவாய் அலுவலர் தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

மேலும் முதியவர் பிரச்சனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.ஐ. முதியவரிடம் வாக்குவாதம் செய்து அவரை நெஞ்சில் குத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதியவர் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தால் உச்சக்கட்ட டார்ச்சர்... முதல்வர் வெளிநாடு சென்ற கேப்பில் வேலையைக் காட்டிய அரசு ஊழியர்கள்...!

இந்த நிலையில் முதியவர் வேங்கடபதியை தள்ளிவிட்ட விவகாரம் குறித்து மாவட்ட காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு பணி செய்யவிடாமல் தடுத்ததோடு VAO- வை தாக்கினார் என்றும் நீண்ட நேரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை கட்டுப்படுத்தவே குறைந்த அளவு பலத்தைக் கொண்டு வெங்கடாபதியை SI அமைதிப்படுத்தினார் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மனு கொடுக்கும் முகாமா? மக்களை முடக்கும் முயற்சியா? திமுக அரசை சாடிய அதிமுக

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share