×
 

#BREAKING சேலத்தில் துப்பாக்கிச்சூடு ... நகைக்காக மூதாட்டிகளை கொன்றவர் சுட்டுப் பிடிப்பு...!

நகைக்காக மூதாட்டிகளை நகைக்காக மூதாட்டிகளை கொலை செய்து வீசிய சம்பவத்தில் ஒரு குற்றவாளியை தற்போது சுட்டு பிடித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இரண்டு மூதாட்டிகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் மூதாட்டிகள் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலமாகி இருக்கிறது. இரண்டு மூதாட்டிகள் கொலை வழக்கில் ஒருவர் சுட்டுப் பிடிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே கல்குவாரியில் இரண்டு மூதாட்டிகள் சடலமாக மீட்கப்ட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த நபரான சங்ககிரி பகுதியைச் சேர்ந்த அய்யனார் என்பவரை காவல் துறையினர் சுட்டு பிடித்துள்ளனர். 

கடந்த திங்கட்கிழமை சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, துாதனுார் காட்டுவளவை சேர்ந்த, அண்ணாமலை மனைவி பெரியம்மா, 65; இ.காட்டூர் மாரிமுத்து மனைவி பாவாயி ஆகிய இருவரும் ஆடு மேய்க்கச் சென்றனர். இவர்கள் இருவரும் இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் மகுடஞ்சாவடி போலீசில் புகார் அளித்திருந்தனர். 

இதையும் படிங்க: அதிரடி திருப்பம்... சேலம் ஈரடுக்கு மேம்பாலத்தில் நடந்தது என்ன?... உண்மையை விளக்கிய காவல் ஆணையர்...! 

இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு இருவரும்  துாதனுார் காட்டுவளவில் உள்ள கல்குவாரியில் சடலமாக மீட்கப்பட்டனர். அப்போது அவர்கள் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதை தொடர்ந்து சடலத்தை மீட்டு சேலம் மாவட்ட காவல் துறையினர் அந்த பகுதியில் மூன்று தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சங்ககிரியைச் சேர்ந்த அய்யனார் என்பவர் நகைக்காக மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து மாவட்ட எஸ்பி விமலாவின் உத்தரவின் பெயரில் ஏடிஎஸ்பி சோமசுந்தரம் மேற்பார்வையில் மூன்று தனிப்படை போலீசார் அய்யனாரைத் தேடி வந்தனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் சங்ககிரி அருகே உள்ள ஒறுக்கா மலை என்னும் பகுதியில் குற்றவாளி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மகுடஞ்சாவடி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையில் உதவி ஆய்வாளர் கண்ணன் தலைமை காவலர்கள் அழகு முத்து, கார்த்திகேயன் ஆகியோர் குற்றவாளியை சுற்றி வளைத்தனர்.

அப்பொழுது குற்றவாளி அய்யனார் போலீசார் கத்தியால் தாக்க முயற்சி செய்த பொழுது, உதவி ஆய்வாளர் கண்ணன் என்பவரின் வலது கையில் கத்திக்குத்திவிட்டு தப்பிக்க முயற்சி செய்த பொழுது போலீசார் சுட்டதில் குற்றவாளி அய்யனாரின் வலது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

பின்னர் போலீசார் அவரை பிடித்து உடனடியாக சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தினர்.  தொடர்ந்து அய்யனார் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உதவி ஆய்வாளர் கண்ணனிடம் சங்ககிரி உதவி கண்காணிப்பாளர் தனசேகர், இன்ஸ்பெக்டர் ரமேஷ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இதையும் படிங்க: கோவையில் மீண்டும் பகீர் சம்பவம்.. திடீரென கேட்ட அலறல் சத்தம்.. சீறிப்பாய்ந்த கார்.. இளம்பெண் கடத்தலா?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share