×
 

கோவையில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்... சீருடையுடன் காவலர் அட்ராசிட்டி...!

கோவையில் கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவலர் மணிவேந்தன் கைது செய்யப்பட்டுள்ளார். 

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிவேந்தன், கோவை போத்தனூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆய்வாளரின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில், நேற்று பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்தில் அவர் பயணம் செய்துள்ளார். அப்போது, கிணத்துக்கடவு அருகே பேருந்தில் ஏறிய, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி ஒருவரும் அதே பேருந்தில் பயணம் செய்துள்ளார்.

பேருந்தில் அதிக நெரிசல் இருந்ததால், அந்த மாணவி படிக்கட்டு பகுதியில் நின்று பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, உதவி செய்வது போல் மாணவியின் கையை காவலர் மணிவேந்தன் பிடித்ததாகவும், பின்னர் பேருந்து ஈச்சநாரி அருகே வந்தபோது, மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை... காதலன் அந்தரங்க உறுப்பை கத்தியால் குத்திக் கிழித்த பெண்...!

இதையடுத்து, மாணவி கூச்சலிட்டதைத் தொடர்ந்து பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. அப்போது பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். சம்பவ இடத்திலேயே காவலர் மாணவியிடம் மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், மாணவி இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாணவியும் அவரது பெற்றோரும் போத்தனூர் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில், காவலர் மணிவேந்தனை போலீசார் கைது செய்தனர். மேலும், பெண் வன்கொடுமை உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரை நீதிமன்ற நடவடிக்கைக்காக கைது செய்துள்ளனர்.

பட்டப்பகலில், பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த அரசு பேருந்தில், காவலர் ஒருவரே கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்த சம்பவம், பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ஊட்டிக்கு டூர் அழைத்துச் சென்ற உடற்கல்வி இயக்குனர்... அறைக்குள் வைத்து பேராசிரியைக்கு நடந்த கொடூரம்...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share