×
 

பொள்ளாச்சி தீர்ப்பு ஒரு எச்சரிக்கை..! கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து.. திருமாவளவன் ஆவேசம்..!

பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு இந்தியாவில் இனி எங்கும் தவறுகள் நடக்காததற்கு எச்சரிக்கை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். இந்த வழக்கில் தி.மு.க., அ.தி.மு.க., என உரிமை கோறுவதில் நியாயம் இல்லை என்றார்.

கோவையில் நடைபெறும் கட்சி நிகழ்வில்  கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது பேசிய அவர், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழ்நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்திய செயல். இது போன்ற கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்கள் இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் எந்த மூலையில் நடக்கக் கூடாது என்ற அளவிற்கு இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் தப்பித்து விடுவார்களோ? என்ற ஐயம் இருந்தது. ஆனால் அரசு தரப்பில் உறுதியாக நின்று வழக்குறிஞர்கள் வாதாடி இருக்கிறார்கள் என்பது இதில் உறுதிபடுகிறது. அந்த வகையில் அரசு தரப்பு வழக்கறிஞர்களையும் பாராட்டுகிறேன். ஏற்கனவே குறிப்பிட்டது போல இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமின்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மட்டுமின்றி மனிதநேயம் உள்ள அனைவருக்கும் ஏற்பட்ட  ஒரு கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்தாகவே அமைந்து இருக்கிறது. அந்த வகையில் இந்த தீர்ப்பை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.

இதையும் படிங்க: திமுகவா? தவெகவா? எத்தனை சீட்டு? நேரம் வரட்டும் சொல்கிறேன்! திருமா ட்விஸ்ட் பேச்சு..!

இந்த வழக்கில் தி.மு.க. அ.தி.மு.க., வி.சி.க என உரிமை கோறுவதில் நியாயம் இல்லை, சான்றுகள் வலுவாக இருந்தது குறிப்பாக செல்போன்கள் மற்றும் சமூக வலைத் தளங்களில் பதிவு செய்த தடையங்கள் இந்த தண்டனைக்கு ஆதாரங்களாக இருந்தது. அதுவே அவர்களால் தப்பிக்க இயலவில்லை. அதிலிருந்து அவர்களால் மீள முடியாத அளவிற்கான ஆதாரங்களை அவர்களே உருவாக்கி விட்டார்கள் என்பதே உண்மை. அந்த ஆதாரங்கள் தான் இந்த தண்டனைக்கு மிக முக்கிய வலுவான தடையாங்களாக இருந்து இருக்கிறது, இதில் யாரும் உரிமை கோறுவதில் அர்த்தமில்லை என்றார்.

அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை தந்த வழக்கை சி பி ஐக்கு மாற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் பரவும் கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அண்ணா  பல்கலைக்கழக மாணவி  மட்டுமல்ல  யார் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் அவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் இந்த வழக்கு அந்த வழக்கு என தனித்தனியாக அணுக முடியாது பாலியல் வல்லுறவு குற்றங்கள் குறித்து  மாநில அரசு தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்றார்.  

ரம்மி போன்ற விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வருகிறதோ? அதே வேளையில் சமூக வலைதளங்களில் பரவுகின்ற ஆபாச வலைத்தள விளம்பரங்கள் போன்றவற்றை தடை செய்ய வேண்டும். இந்த வலைதளங்களை முற்றிலும் பயன்படுத்தாத அளவிற்கு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மத்திய அரசுக்கும் கூடுதல் பொறுப்பு இருகிறது. மாநில அரசுக்கும் பொறுப்பு இருக்கிறது. ஆகவே பாலியல் குற்றங்கள் பெருகுவதற்கு இவையும் முக்கியமான காரணமாக உள்ளது. என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.


 
பள்ளி கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ் சாக்கா பயிற்சி அளிப்பது தொடர்பான கேள்விக்கு, பள்ளி கல்லூரிகளில் ஆர்.எஸ்.எஸ். சாக்கா பயிற்சியை பாசறை மையங்களாக பயன்படுத்தி வருகிறார்கள். நான் சென்னையில் கல்லூரி மாணவனாக தங்கி இருந்தபோது என்னுடைய அறைக்கு வந்த ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் மாணவர்களை அழைக்க வந்திருந்த நிலையில் என்னையும் பயிற்சிக்கு வாருங்கள் என அழைத்திருக்கிறார்கள். எனக்கே அந்த அனுபவம் உள்ளது. சாக்கா பயிற்சி பள்ளி வளாகங்களில் அதிகாலை நேரங்களில் நடத்துகின்றனர். இன்னும் தொடர்கிறது. 

அவர்கள் மதவாத கருத்துக்களை இதன் மூலம் பரப்புகிறார்கள். யோகா பயிற்சி பெறுவதாக கூறி மேலோட்டமாக சொல்லப்பட்டாலும் மதவாத அரசியலை பிஞ்சு உள்ளத்தில் திணிக்கிறார்கள். ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் இவற்றைக் கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பரவக்கூடிய மதவாத அரசியலை தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

இதையும் படிங்க: பாகிஸ்தான் கூட போர் வேணுமா? - இந்தியாவை பின்வாங்கச் சொல்லும் திருமா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share