×
 

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு... அவதூறு கருத்து சொல்ல youtube சேனல்களுக்கு தடை!

பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்பு படுத்தி அவதூறு கருத்து தெரிவிக்க youtube சேனல்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது

பொள்ளாச்சி பாலியல் வழக்கு, தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 2019 ஆம் ஆண்டு வெளிப்பட்ட ஒரு மிகப்பெரிய பாலியல் வன்கொடுமை விவகாரமாகும். இந்த வழக்கு, பல இளம் பெண்களை ஒரு கும்பல் கடத்தி, பாலியல் வல்லுறவு செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து, பாதிக்கப்பட்டவர்களை பணம் பறிப்பதற்காகவும், மேலும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்குவதற்காகவும் மிரட்டிய ஒரு கொடூரமான குற்றச்சம்பவமாக அமைந்தது.

இந்த விவகாரம் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி வி. ஜெயராமனை தொடர்புபடுத்தி எழுந்த சர்ச்சைகள், இந்த வழக்கை மேலும் சிக்கலாக்கியது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கு வெளிப்பட்டபோது, ஜெயராமனையும், அவரது மகன் பிரவீனையும் இந்த வழக்குடன் தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களிலும், அரசியல் தரப்புகளிலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகள், வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஜெயராமனும் அவரது மகனும் செயல்பட்டதாகவும், அவர்கள் இந்தக் குற்றங்களை மறைக்க முயன்றதாகவும் கூறப்பட்டன. 

இதையும் படிங்க: தமிழ்நாட்டையே உலுக்கிய ஆம்பூர் கலவர வழக்கு... வரும் 28ஆம் தேதி தீர்ப்பு!

இந்த நிலையில் தங்களைப் பற்றி அவதூறு கருத்து தெரிவிக்க யூடியூப் சேனல்களுக்கு தடை விதிக்க கோரி பொள்ளாச்சி ஜெயராமனும் அவரது மகனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்க தொடர்ந்தனர். மேலும் ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டும் வந்தனர். இந்த நிலையில், பொள்ளாச்சி ஜெயராமனை தொடர்பு படுத்தி அவதூறு கருத்து தெரிவிக்க youtube சேனல்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது. 

இதையும் படிங்க: இபிஎஸ் வழக்கு... "NO RESTRICTION"! இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share