×
 
☰

#BREAKING புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா?... அமைச்சர் நமச்சிவாயம் அதிரடி அறிவிப்பு...!

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இன்று ஒருநாள் மட்டும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் பல இடங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அந்தமான் அருகே நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற கூடும் எனவும், அடுத்து உருவாகும் புயலுக்கு ‘அர்னாப்’ என பெயர் சூட்டப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் மட்டும் அல்லாமல் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

 புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இடி, மின்னலுடன் கூடிய மழையும், சில இடங்களில் மணிக்கு 40–50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் 24 மாவட்டங்களில் இன்று காத்திருக்கும் தரமான சம்பவம்... அதுவும் ஹை அலர்ட்டில் 7 மாவட்டங்கள்...!!

நேற்று கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றும் காலை முதலே புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை தொடர்ந்து வந்தது. இதனால் இன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுமா? அல்லது விடுமுறை அளிக்கப்படுமா? என பெற்றோர்களும், மாணவர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக இன்று சில இடங்களில் மிக கனமழையும், இடி, மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசுவதற்கும் வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி இன்று ஒருநாள் மட்டும் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். 

இதையும் படிங்க: #BREAKING விட்டாச்சு லீவு... மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை... அமைச்சர் அதிரடி அறிவிப்பு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share