×
 

புதுவை அரசியலில் தலைகீழ் திருப்பம்... கூட்டணியில் உச்சகட்ட குழப்பம்... காங்கிரஸை கடுப்பேற்றும் திமுக...!

இரண்டு கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்த இருக்கிறது.

புதுவையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. திமுக சார்பில் இன்னும் வேட்பாளர்களும் அறிவிக்காத நிலையில் திமுகவினர் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகிறார்கள். கூட்டணியும் இன்னும் இறுதியாகாத நிலையில் இதுபோன்ற சம்பவம் அங்கே பேசு பொருளாக இருக்கிறது. 

புதுச்சேரியில்  திமுக, காங்கிரஸ் இடையே உச்சகட்ட குழப்பமானது நீடித்து வருகிறது. இதுவரை எந்த தொகுதியும் உடன்பாடு எட்டப்படவில்லை. கூட்டணியில் வந்து யார் தலைமை என்பது குறித்து நீண்ட இழுபறியானது நீடித்து வருகிறது. இரண்டு கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்த இருக்கிறது. அதேபோல காங்கிரஸ் தலைமையில் அவசர அழைப்பாக முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியின் தம்பி வைத்திலிங்கம், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் ஆகியோர் டெல்லிக்கு விரைந்திருக்கிறார்கள். 

இந்த நிலையில் புதுச்சேரியில் இருக்கக்கூடிய  30 தொகுதிகளிலும் திமுக - காங்கிரஸ் இடையே உடன்பாடு எட்டப்படாத நிலையில், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலியார்பேட்டை தொகுதியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சம்பத் சாரம் தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். காங்கிரஸ் - திமுக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டிருந்தாலும், இரண்டு கட்சிக்கும் எத்தனை தொகுதிகள், யாருக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பதில் நீண்ட இழுபறி நீடித்து வருகிறது.  திமுக சார்பில் வேட்பாளர்களும் அறிவிக்கப்படாத நிலையிலும் தற்போது வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்டு வருகிறது. காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் மிகப்பெரிய குழப்பம் நீடித்து வரும் நிலையில், திமுக வேட்பாளர் தன்னிச்சியாக தற்போது வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். 

இதையும் படிங்க: தேர்தல் வந்தாச்சு..! பரபரப்பு அரசியல் களம்..! விசிகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்..!!


ஏற்கனவே தமிழ்நாட்டில் காங்கிரஸ் - திமுக கூட்டணியை இறுதி செய்ய மிகப்பெரிய இழுபறியானது நீடித்தது.  நடிகர் விஜய்யின் தவெக அரசியல் களத்தில் நுழைந்ததால், காங்கிரஸ் கட்சி அந்தப் புதிய கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடும் என்று யூகங்கள் எழுந்தன. கூடுதல் இடங்களைப் பெற காங்கிரஸ் கட்சி விஜய்யின் பெயரைப் பயன்படுத்தி திமுகவிடம்  பேரம் பேசுவதாக திமுக சந்தேகப்பட்டது. திமுக - காங்கிரஸ் கூட்டணி முடிந்தது என அனைவரும் எதிர்பார்த்த நேரத்தில்,டெல்லி தலைமையால் மத்தியஸ்தராக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் நியமிக்கப்பட்டார். ஸ்டாலினுடனான அவரது சந்திப்பிற்குப் பிறகு, திமுக தனது ஆஃபரை 25-லிருந்து 27 ஆக உயர்த்தி, இறுதியில் 28-ஆக நிலைநிறுத்தியது. இதனால் காங்கிரஸ் - திமுக கூட்டணியும் தமிழ்நாட்டில் உறுதி செய்யப்பட்டது. தற்போது புதுச்சேரியில் இந்த இரு கட்சிகளுக்கும் இடையே சுமூக முடிவு எட்டப்படாத நிலையில், திமுகவினர் வேட்புமனு தாக்கல் செய்து வருவது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 

இதையும் படிங்க: நெருங்கிய தேர்தல்..! திமுக வேட்பாளர் தேர்வு தீவிரம்..! 2வது நாளாக முதல்வர் ஸ்டாலின் நேர்காணல்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share