×
 

அரசே பாவம்..! பொங்கல் பரிசு தொகையை அரசுக்கு திருப்பி அனுப்பிய சமூக ஆர்வலர்..!

தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகையை சமூக ஆர்வலர் ஒருவர் மீண்டும் அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது ஒரு நீண்டகால வழக்கமாகும். இத்திட்டம் தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாட உதவும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் இத்தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம்.கடந்த ஆண்டுகளில் இத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு போன்ற அடிப்படைப் பொருட்கள் இடம்பெற்றன. சில ஆண்டுகளில் ரூ.1000 முதல் ரூ.2500 வரை ரொக்கமும் சேர்க்கப்பட்டது. ஆனால் நிதி நெருக்கடி காரணங்களால் சில சமயங்களில் ரொக்க உதவி நீக்கப்பட்டது. இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டமும் இதனுடன் இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. பொங்கல் பரிசு தொகை மூன்றாயிரம் ரூபாயை தமிழக அரசுக்கு சமூக ஆர்வலர் ஒருவர் திருப்பி அனுப்பி உள்ளார். அரசு நிதிச் சுமையில் இருப்பதால் அந்த பணத்தை தான் பெற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் ரேஷன் கடையில் இருந்து அந்த பணத்தை பொங்கலுக்கு முன் தினம் பெற்றதாகவும் ஆனால் அதனை அரசுக்கு திருப்பி அனுப்ப முடிவெடுத்ததாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தொட்டு பாரு... தரமாக வெச்சு செய்த காளை..! சரண்டர் ஆன வீரர்..!

இதுபோல பரிசு தொகை அறிவிக்கப்பட்டால் அதனை வாங்காமல் அப்படியே விட்டு விடுவேன் என்று கூறிய அவர், ஆனால் அந்த பணம் மீண்டும் அரசின் கஜானாவிற்கு செல்கிறதா என்ற சந்தேகம் இருந்ததால் இந்த முறை 3000 ரூபாயை பெற்று அரசுக்கு தானே மணியார்டர் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: களைகட்டிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... துள்ளி குதித்த EX. அமைச்சரின் மாடு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share