இது தான் DMK பார்முலா... பொன்முடிக்கு மீண்டும் பதவி! அதிமுக ஆவேசம்...!
பொன்முடிக்கு மீண்டும் கட்சிப் பதவி வழங்கி உள்ளதை அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
2026ல் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது. திமுகவின் துணை பொதுச் செயலாளர்கள் கட்சியின் பலவீனமான பகுதிகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றனர், குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் கட்சி அமைப்பை விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கனிமொழி, ஐ. பெரியசாமி உட்பட 5 பேர் திமுகவின் துணை பொதுச் செயலாளராக இருந்தனர். ஏற்கனவே ஐந்து பேர் உள்ள நிலையில், பொன்முடி, சாமிநாதன் கூடுதலாக துணை பொதுச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டனர். திமுக துணை பொது செயலாளர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
சைவம் வைணவம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்ததால் பொன்முடியின் கட்சி பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நீதிமன்றமே பொன்முடியை கடுமையாக சாடியது. அப்போது தான் பொன்முடியின் கட்சிப் பதவியை பறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதனிடையே, பெண்களை மிகவும் கொச்சையாக பேசிய பொன்முடிக்கு மீண்டும் பதவி வழங்குவதா என அதிமுக ஆவேசமடைந்து உள்ளது. கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை நாட்டையே உலுக்கியுள்ள சமயத்தில் கொச்சையாக பேசிய பொன்முடிக்கு பதவி கிடைத்துள்ளதாக சாடியது.
இதையும் படிங்க: பெண்களுக்கு பெப்பர் ஸ்ப்ரே... கோவையில் அதிமுகவினர் நூதன விழிப்புணர்வு...!
ஆபாசமாக, அவதூறாக இழிவுபடுத்தி பேசினால் நீக்கம் என கண்துடைப்பு நாடகம் நடத்திவிட்டு, மீண்டும் பதவி வழங்குவதே DMK பார்முலா என்று விமர்சித்து உள்ளது. பொன்முடிக்கு பதவி வழங்கியதன் மூலம் திமுக சொல்லவரும் செய்தி., திமுக பெண்களுக்கு எதிரானது என்பது தான் என அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.
இதையும் படிங்க: MLA பதவியை ராஜினாமா செய்கிறேன்! திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் அறிவிப்பு…!