"ஆபாச பேச்சு"..! வழக்கை ரத்து செய்ய முடியாது... பொன்முடிக்கு குட்டு வைத்த நீதிமன்றம்..!!
சைவ, வைணவ சமயம் குறித்த சர்ச்சை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பொன்முடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
தி.மு.க.வின் மூத்த தலைவரும், அப்போது வனத்துறை அமைச்சருமான க. பொன்முடி, விழுப்புரத்தில் நடைபெற்ற ஒரு கட்சி நிகழ்ச்சியில் பேசிய கருத்துகள் சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து பெரும் சர்ச்சையை கிளப்பின. இந்தப் பேச்சு வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து அரசியல், சமூக மற்றும் சட்ட வட்டாரங்களில் பெரும் எதிர்ப்பு எழுந்தது.
பொன்முடியின் பேச்சில், ஒரு விலைமாது வீட்டுக்கு செல்லும் ஆணிடம் அந்தப் பெண் “நீங்கள் சைவமா, வைணவமா?” என்று கேட்பதாகவும், பின்னர் அது தொடர்பாக பட்டை மற்றும் நாமம் ஆகியவற்றை பாலியல் நிலைகளுடன் ஒப்பிட்டு ஆபாசமான வகையில் விளக்குவதாகவும் கூறப்பட்டது. பெண்களை முன்னிலைப்படுத்தி “புரிந்துகொள்ள வேண்டாம்” என்று முன்கூட்டியே கூறியும், அவர் இந்தக் கதையைச் சொன்னார். இது சைவ-வைணவ சமயங்களை அவமதிப்பதாகவும், பெண்களை கொச்சைப்படுத்துவதாகவும் பார்க்கப்பட்டது.
இந்தப் பேச்சு பெரும் கண்டனத்துக்கு உள்ளானது. தி.மு.க.வின் உள்ளாட்சி பிரதிநிதிகள், எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஹிந்து அமைப்புகள் இதை கடுமையாக விமர்சித்தன. பொன்முடியின் பேச்சு சமய நல்லிணக்கத்தை பாதிப்பதாகவும், பெண்களுக்கு எதிரானது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து தி.மு.க. தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பொன்முடியை கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார். இருப்பினும் அமைச்சர் பதவியை அவர் தக்கவைத்துக் கொண்டார். பொன்முடி பின்னர் மன்னிப்பு கோரினார்.
இதையும் படிங்க: மக்களுக்கு ரூ.2,000! எம்.எல்.ஏ-க்களுக்கு ரூ.50கோடி! மு.க.ஸ்டாலின் திட்டம் இதுதான்! அமைச்சர் நிர்மல்குமார் விளாசல்!
சர்ச்சை வெடித்த உடனேயே சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை எடுத்தார். பொன்முடி மீது வழக்குப் பதிய நீதிமன்றம் கடுமையாக அறிவுறுத்தியது. இந்த வழக்கின் தீவிரம் இன்னும் குறையாத நிலையில் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பொன்முடி மனுத் தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது என்று கூறி உத்தரவிட்டது.
இதையும் படிங்க: தமிழ் நாட்டுக்கும் வாஷிங்மிஷின் வந்துடுச்சாமே..? அப்படியா..? கலாய்த்த கனிமொழி..!