×
 
☰

#BREAKING: விடுதலையானார் பொன்முடி.! ஓராண்டு சர்ச்சை வழக்கிற்கு டாட்..! நீதிமன்றத்தில் நடந்த திடீர் திருப்பம்..!

சமயங்கள் தொடர்பான சர்ச்சை வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் பொன்முடி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

திமுக முன்னாள் அமைச்சர் க. பொன்முடி சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து ஆற்றிய சர்ச்சைப் பேச்சு தமிழக அரசியலில் பெரும் அலையை ஏற்படுத்தியது. 2025 ஏப்ரல் மாதம் சென்னையில் தந்தை பெரியார் திராவிட கழகம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி பேசும்போது, சைவர்களின் நெற்றியில் இடும் பட்டையும் வைணவர்களின் நாமமும் தொடர்பாக ஒரு நிகழ்வை நினைவுகூர்ந்தார். அந்த நிகழ்வில் அவர் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியவுடன் கடும் கண்டனம் எழுந்தது.

இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையிலும் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும் அமைந்திருப்பதாக பல தரப்பினரும் விமர்சித்தனர்.இந்தச் சர்ச்சை வெடித்ததும் அரசியல் ரீதியான விளைவுகள் உடனடியாகத் தொடங்கின. பொன்முடி திமுகவின் துணைப் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து அமைச்சர் பதவியிலிருந்தும் விலக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் இந்தப் பேச்சைக் கடுமையாகக் கண்டித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. நீதிபதிகள் இது வெறுப்புப் பேச்சு வரம்பிற்குள் வருவதாகவும், மத உணர்வுகளைக் காயப்படுத்தும் நோக்கத்துடன் அமைந்திருப்பதாகவும் கருத்து தெரிவித்தனர். காவல்துறைக்கு வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது.

பல நூறு புகார்கள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டன.காவல்துறை விசாரணை நடத்திய பிறகு, பொன்முடியின் பேச்சு வெறுப்புப் பேச்சு வரம்பிற்குள் வரவில்லை என்றும், அவர் பழைய சமூக சீர்திருத்தவாதியின் கருத்துக்களை நினைவுகூர்ந்ததாகவும் முடிவு செய்து புகார்களை முடித்து வைத்தது. இதையடுத்து உயர்நீதிமன்றம் தாமாக எடுத்த வழக்கையும் முடித்து வைத்தது. காவல்துறை விசாரணையில் முகாந்திரம் இல்லை எனக் கண்டறியப்பட்டதால் அதிகாரப்பூர்வ வழக்குகள் முடிவுக்கு வந்தன. இதுவே பொன்முடிக்கு இந்த விவகாரத்தில் கிடைத்த விடுவிப்பாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: பொன்முடிக்கு ரிலீஃப்..! ED வழக்கு ரத்து... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

இருப்பினும் பாஜக சென்னை மாநகராட்சி கவுன்சிலர் உமா ஆனந்தன் தனிநபர் புகார் மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த நீதிமன்றம் வழக்கை விசாரணைக்கு ஏற்று சம்மன் அனுப்பியது. பொன்முடி இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்து வழக்கைத் தொடர அனுமதித்தது. பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர் நேரில் ஆஜரான பிறகு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது. 

இந்த நிலையில் பொன்முடி இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். புகாரை வாபஸ் பெற்றதால் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியை விடுதலை செய்து சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. கடந்த 2025 இல் சென்னை மாநகராட்சி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தாக்கல் செய்த வழக்கு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது. பொன்முடி பொதுவெளியில் மன்னிப்பு கோரி உள்ளார் என்றும் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு வழக்கை வாபஸ் பெறுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: ரூ.100 கோடி லஞ்சம்.! அன்பில் மகேஷுக்கு மீண்டும் சிறைவாசம்.!! போலீஸ் பதிலளிக்க உத்தரவு.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share