விடிந்ததுமே பேரதிர்ச்சி... 16 நாட்களாக பரிதவித்த உயிர்... பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட பெண்ணுக்கு இறுதியில் நேர்ந்த கொடுமை...!
மின்வெட்டை சமாளிக்க 4,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட இருக்கிறது
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தவர் உப்பரப்பாளையத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி. இவர் கணினி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.
கடந்த மாதம் 21-ஆம் தேதி மாலை பணி முடிந்து, ராஜேஸ்வரி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியே செல்ல முற்பட்டபோது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் ராஜேஸ்வரி மீது பெட்ரோலை ஊற்றி, சிகரெட் லைட்டர் மூலம் தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
இதில் அலறித் துடித்த ராஜேஸ்வரி பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கடந்த 16 நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: மக்களே உஷார்...!! - குழந்தைகள், கர்ப்பிணிகளை குறி வைக்கும் டெங்கு... வெளியானது அதிபயங்கர எச்சரிக்கை...!
இதனிடையே, காவல்துறையினர் நடத்திய விசாரணையில், திருமணத்தை மீறிய உறவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ராஜேஸ்வரி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து குற்றவாளியை கைது செய்வதற்காக போலீசார் பெருஞ்சேரி சுடுகாடு அருகே சென்றுள்ளனர். அப்போது குற்றவாளி, காவல் உதவி ஆய்வாளர் தமிழரசனை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பொன்னேரி காவல் ஆய்வாளர் சிவகுமார் துப்பாக்கியால் குற்றவாளியான பிரகாஷின் காலுக்கு கீழ் பகுதியில் சுட்டு அவரை கைது செய்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரகாஷ், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கைதிகளுக்கான வார்டில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 16 நாட்களாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் பலத்த தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த அரசு மருத்துவமனையின் தற்காலிக பெண் ஊழியர் ராஜேஸ்வரி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து, ராஜேஸ்வரி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருந்த கொலை முயற்சி வழக்கை, பொன்னேரி காவல்துறையினர் தற்போது கொலை வழக்காக மாற்றி, சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
16 நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்த அரசு மருத்துவமனையின் பெண் ஊழியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்ட பெண் ஊழியர், 16 நாட்கள் உயிருக்கு போராடிய நிலையில் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: “தாய்மொழி காப்பதுபோல முகமூடி”... தமிழ்நாட்டையே உலுக்கிய ‘இந்தி’ சர்ச்சை... திமுக மீது தவெக ஐடி விங்க் பகீர் குற்றச்சாட்டு...!