ஆத்தாடி...!! பாய்ந்து வருது 3,000 கன அடி... சென்னைக்கு ஆபத்தா?
பூண்டி நீர் தேக்கத்திலிருந்து கொசலை ஆற்றில் உபரி நீரானது திறந்துவிடப்பட்டுள்ளதால் கொசலை ஆற்றும் கரையோரம் வசிக்கும் 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வட மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து செல்லக்கூடும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனால் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை எச்சரிக்கையைத் தொடர்ந்து ஏரிகளிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
செம்பரபாக்கத்தை தொடர்ந்து தற்போது பூண்டி எரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 3000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரையோர மக்களே உஷார்..!! பூண்டி நீர்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 5000 கனஅடி நீர் திறப்பு..!!
சென்னை மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரங்களில் ஒன்றாக திகழும் திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கான நீர்வரத்தானது 790 கன அடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு ஏற்கனவே வெளியேற்றப்பட்ட அளவான 2500 கன அடியிலிருந்து 3000 கன அடியாக உயர்த்தி பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் அணையின் மொத்த நீர்மட்ட உயரமான 35 அடியில் தற்பொழுது 32.51 அடியாகவும், மொத்த நீர் கொள்ளளவான 3,231 மில்லியன் கன அடியில் தற்பொழுது 2,382 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது.
தற்பொழுது திருவள்ளூர் மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் காரணமாக ஏரிக்கு வரும் நீரின் அளவு அதிகரிக்க கூடும் என்பதனால் அணையின் பாதுகாப்பு கருதியும், அணையில் மழைநீரை சேகரித்து வைக்க ஏதுவாகவும் தற்பொழுது உபரி நீரின் திறப்ப பொதுப்பணித்துறை அதிகாரிகள் உயர்த்தியுள்ளனர்.
மேலும் பூண்டி நீர் தேக்கத்திலிருந்து கொசலை ஆற்றில் உபரி நீரானது திறந்துவிடப்பட்டுள்ளதால் கொசலை ஆற்றும் கரையோரம் வசிக்கும் 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தாழ்வான பகுதியிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: பாய்ந்து வரும் ஆபத்து... 10க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு பறந்தது எச்சரிக்கை..!