×
 

ரொம்ப அப்செட்..!! எதிர்பார்த்தது வேற... நடந்தது வேற... பூவை ஜெகன் மூர்த்தி அதிருப்தி..!

பூவை ஜெகன்மூர்த்தியின் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியால் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

அதிமுக தலைமையிலான என் டி ஏ கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். பூவை ஜெகன்மூர்த்தியின் புரட்சி பாரதம் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கே வி குப்பம் தொகுதி ஒதுக்குவதாக கூறி இருந்தார். பூவை ஜெகன்மூர்த்தி, புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், 2021 சட்டமன்றத் தேர்தலில் வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.வுமாவார்.

அந்தத் தேர்தலில் அவர் தனது தொகுதியில் வலுவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதிமுகவுடனான கூட்டணியின் மூலம் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்றார். இப்போது 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுக தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இடம் பெற்றுள்ளது.

இந்தக் கூட்டணியில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11, தமாகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பூவை ஜெகன்மூர்த்தியின் கட்சிக்கு வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த அறிவிப்பை வெளியிட்ட சமயத்தில், இந்த ஒதுக்கீடு பூவை ஜெகன்மூர்த்தியிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: தேசிய ஜனநாயக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் விவரம் வெளியீடு!

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் எதிர்பார்த்தது வேறு, இங்கு நடந்தது வேறு” என்று அவர் வெளிப்படையாகத் தெரிவித்தார். முன்னதாக அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, புரட்சி பாரதம் கட்சி ஆறு தொகுதிகளைத் தேர்வு செய்து கொடுத்திருந்தது. அவற்றில் நான்கு தொகுதிகளை எதிர்பார்த்ததாகவும் தெரிவித்தார். உடனடியாக உயர்நிலை குழு கூட்டம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: #BREAKING: அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 5 இடங்கள்! 'தாமரை' சின்னத்தில் களம் காணும் ஜி.கே.வாசன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share