×
 
☰

தொடரும் மின்வெட்டு.. வெளிநாட்டு ஷூட்டிங்கில் முதல்வர்... ஸ்டாலின் கடும் விமர்சனம்..!!

மின்வெட்டு பிரச்சனையை சுட்டிக்காட்டி திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது தொடர்ந்து மின்வெட்டுகள் ஏற்பட்டு வருவது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களிலும் கூட மின்சாரம் துண்டிக்கப்படுவதால் குடும்பங்கள் சிரமப்படுகின்றன. குழந்தைகளுடன் இருட்டில் போராடும் நிலை உருவாகியுள்ளது. பல பகுதிகளில் மக்கள் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது. இத்தகைய சூழலில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தவெக ஆட்சியில் அமைச்சர் பெருமக்களுக்கே மின்வெட்டு பாதிப்பை ஏற்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆட்சியாளர்களுக்கே இத்தகைய அனுபவம் என்றால் சாதாரண மக்களின் நிலைமை என்னவென்பதை விளக்க வேண்டிய அவசியமில்லை என்று அவர் கூறியுள்ளார். தமிழகத்தில் தற்போது இரண்டு விஷயங்களுக்கு இடையேயே போட்டி நடப்பதாக அவர் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

ஒன்று மின்வெட்டு, மற்றொன்று அரிவாள் வெட்டு. பட்டப்பகலில் கொலைகள், துப்பாக்கிச் சூடுகள் போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு நிலை மோசமடைந்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.இந்த விமர்சனத்தின் மையமாக மின்சாரப் பிரச்சினை இருக்கிறது. மின் தேவை அதிகரித்துள்ள நிலையில் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் குறைபாடுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கூச்சமே இல்லாம எப்படி பேச முடியுது CM சார்? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

ஆனால் அரசு இந்தப் பிரச்சினையை தீவிரமாக அணுகாமல் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. ஸ்டாலின் தனது உரையில், திமுக ஆட்சி உண்மையான ஆட்சியை வழங்கியதாகவும், தற்போதைய ஆட்சி ரீல்ஸ் ஆட்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார். திரைப்பட நடிப்பை நிறுத்திவிட்டதாகச் சொல்லிக்கொண்டாலும், முதலமைச்சர் தொடர்ந்து மக்கள் முன் நடித்துக்கொண்டிருப்பதாக அவர் கிண்டல் செய்தார். முன்பு பஞ்ச் டயலாக்குகள், இப்போது வெளிநாட்டுப் படப்பிடிப்பு என்று அவர் குறிப்பிட்டார்.

 

இதையும் படிங்க: வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share