மின்வெட்டு ஏன்.? கரண்ட் கட் பிரச்சனைக்கு செக்..! மின்துறை புதிய திட்டம்..!
தமிழகத்தின் மிகவும் மின்வெட்டுக்கான காரணங்களை மின்துறை தெரிவித்துள்ளது..
தமிழக வெற்றி கழக தலைவரும் முதல்வருமான விஜய் தலைமையில் அமைக்கப்பட்ட புதிய அரசு, பொறுப்பேற்ற சில நாட்களுக்குள் மின்வெட்டுப் பிரச்சினையால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. கோடை வெயிலின் உச்சத்தில், குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படும் திடீர் மின்தடைகள் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களை பெரிதும் அவதிப்படுத்தி வருகின்றன.
இது தொடர்பாக பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, சென்னை உள்ளிட்ட பல நகர்ப்பகுதிகளில் மின்வெட்டு அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. பல்வேறு இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டுள்ள நிலையில் காரணங்களை குறிப்பிட்டு தமிழ்நாடு மின்சாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.
- அதிகபட்ச நேரங்களில் உள்ளூர் மின் தேவை அதிகரிப்பால் ஏற்படும் Fuse Of Callsஆல் மின் தடை ஏற்படுகிறது.
- நிலத்தடி மின்கம்பி பழுது, ஜம்பர் கட மற்றும் மின் கம்பி துண்டிப்பு, விநியோக மின்மாற்றி பழுது, அதிககமையால் மின்தடை ஏற்பட்டுள்ளது.
- துணை மின்நிலையங்களில் ஏற்படும் கோளாறுகள், டிரிப்பிங், மழை, காற் இடி போன்ற வானிலை காரணங்களாலும் மின்தடை என விளக்கம் அளித்துள்ளது.
- திட்டமிட்ட பராமரிப்பு பணிகளுக்கான மின்விநியோகம் நிறுத்தம், மரக்கிளைகள் மின்கம்பிகளை தொடுதல், வெளிப்புற சேதத்தால் மின்தடை ஏற்படுகிறது.
- மின்வெட்டு பிரச்சனைகளை சரிசெய்ய மொபைல் பராமரிப்பு குழுக்கள் MRT குழுக்கள் அனைத்து மின்விநியோக வட்டங்களில் பணியில் உள்ளன.
- நகர்ப்புறங்களில் அதிக சுமையால் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டை சரி செய்ய அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
- வேகமாக வளரும் நகர்ப்புற பகுதிகளில் அதிக நுகர்வோர் சுமையால் ஏற்படும் மின் உபகரணங்களில் ஏற்படும் அழுத்தத்தாலும் மின்தடை
- மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படும் பகுதியில் புதிய துணை மின்நிலையங்கள் நிலத்தடி மின் கம்பியை வலுப்படுத்த திட்டம்
- நகரப்பகுதிகளில் மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படும் பகுதியில் உயர்திறன் மின்மாற்றி அமைக்க திட்டம்
- நம்பகமான மின் விநியோகத்தை மக்களுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: நள்ளிரவில் கரண்ட் கட்..! டென்ஷன்-ஆன மக்கள்... தண்டையார்பேட்டை மின் ஊழியர்கள் சிறை பிடிப்பு..!