×
 

உச்சக்கட்ட கொடூரம்... அதிவேகமாக மோதிய லாரி... காரை உடைத்துக்கொண்டு வெளியே வந்து விழுந்த 3 இளைஞர்கள் உடல்...!

இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்த லாரி ஓட்டுனர் ஜலீஸ் பாஷா ஜாகிரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் அடுத்த துறையூர் சாலையில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் மூன்று பேர் பலியானதாக சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பெரம்பலூர் அருகே இன்று காலை நடைபெற்ற கோரமான சாலை விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலே உயிரந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரை சேர்ந்த 37 வயதான சங்கர்  மற்றும் அரியலூர் மாவட்டம் சன்னாசி நல்லூர் கிராமத்தை சேர்ந்த 21 வயதான சக்தி, அரிசானந்தம் கிராமத்தை சேர்ந்த 30 வயதான விஜய் ஆகியோர் ஒரு காரில் துறையூரிலிருந்து பெரம்பலூர் நோக்கி சென்றுள்ளனர்.

இவர்களது கார் இன்று காலை பெரம்பலூர்   சாலையில் T -களத்தூர் அருகே வந்த போது  எதிரே பெரம்பலூரிலிருந்து துறையூர் நோக்கி சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையும் படிங்க: கொடூரத்தின் உச்சம்... கார் மோதி 2 பள்ளி மாணவர்கள் துடிதுடித்து பலி... நடந்தது என்ன?

விபத்தின் தாக்கம் மிகவும் கடுமையானதாக இருந்ததால் காரில் பயணம் செய்த மூவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். விபத்து குறித்து ஊரக காவல் நிலைய போலீஸார் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தெலுங்கானா மாநிலத்தைச் சார்ந்த லாரி ஓட்டுனர் ஜலீஸ் பாஷா ஜாகிரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

இதையும் படிங்க: மலைப்பாதையில் தலைக்குப்புற கவிழ்ந்த வேன்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 22 பேரின் நிலை என்ன?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share