தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை... NDRF வீரர்கள் தயார்... முன்னெச்சரிக்கை பணிகள் மும்முரம்...!
வடகிழக்கு பருவ மழை துவங்கி உள்ளதால் என்டிஆர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
NDRF-ன் தமிழகத்தில் உள்ள முக்கிய தளங்கள் அரக்கோணம் மற்றும் நீலகிரி போன்றவை. இந்தப் படையின் நான்காவது பட்டாலியன் அரக்கோணத்தில் அமைந்துள்ளது, இது தமிழகத்தின் பெரும்பாலான பேரிடர் நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக விளங்குகிறது. பருவமழை காலம் தொடங்குவதற்கு முன்பே, NDRF குழுக்கள் மாநிலத்தின் வெள்ள பாதிப்புகளுக்கு ஆளான மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, விழுப்புரம் போன்ற இடங்களில் நிலை அமர்ந்திருக்கும்.
கடுமையான வெள்ளங்களின் போது, படையினர் inflatable படகுகள், லைஃப் ஜாக்கெட்டுகள், ரஷ்யன் லேடர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களுடன் களமிறங்குகின்றனர். தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே பெய்து வரும் மழையால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். வரும் நாட்களில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து மழை பொழிவு அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கும் என்பதால் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன் காரணமாக NDRF குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் தேசிய பேரிடர் மீட்பு படையின் 7 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. அரக்கோணத்தில் 5 குழுக்கள், சென்னையில் 1 குழு தயார் நிலையிலும்
இதையும் படிங்க: கனமழை எதிரொலி... சனீஸ்வரன் கோவில் கருவறைக்குள் புகுந்த மழைநீர்... பக்தர்கள் கடும் அவதி...!
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் ஒரு NDRF குழு தயார் நிலையில் உள்ளது. மழை பாதிப்பு ஏற்படும் பகுதிக்கு விரைந்து செல்ல ஏதுவாக முன்னெச்சரிக்கையாக மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: ஆரஞ்சு அலர்ட்! அடிச்சு நகர்த்த போகுது... உஷார் மக்களே! 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை... !