×
 

கூட்டணி கட்சி தலைவரை மதிக்கத் தெரியாத பிரேமலதா மக்களை எப்படி மதிப்பார்..? விளாசிய அன்புமணி..!!

கூட்டணி கட்சி தலைவர் திருமாவளவன் வேட்பாளராக அறிமுகப்படுத்திய போது பிரேமலதா எழுந்து நிற்காத சம்பவத்தை அன்புமணி விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு கூட்டணி கட்சியினரும் தங்கள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து உள்ளனர். தங்கள் கட்சி மட்டுமில்லாத தங்கள் கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

அதன்படி, கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணியின் சார்பில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் வேட்பாளராக பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு சமீபத்தில் கடலூரில் நடைபெற்ற திமுக கூட்டணி பொதுக்கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) தலைவர் திருமாவளவன் மூலம் செய்யப்பட்டது.

அந்த மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றிருந்தனர். திருமாவளவன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் போது, மற்ற வேட்பாளர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் செலுத்திய நிலையில், பிரேமலதா மட்டும் எழுந்து நிற்காமல், சிரித்தபடியே அமர்ந்திருந்தார் என்று கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் வீடியோவாகப் பரவியதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: திருமாவளவனுக்கு 8 சீட்.. தேமுதிக-வுக்கு 10 சீட்! திமுக-வை சாடிய அன்புமணி ராமதாஸ்!

இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியது. பலரும் இதை அரசியல் நாகரீகமின்மை என்றும், கூட்டணித் தலைவரை மதிக்காத செயல் என்றும் விமர்சித்தனர். இந்த நிலையில் பிரேமலதாவின் செயலை அன்புமணி விமர்சனம் செய்துள்ளார். கூட்டணி கட்சி தலைவரையே மதிக்காத பிரேமலதா எப்படி மக்களை மதிப்பார் என்று சரமாரியாக கேள்வி முன் வைத்துள்ளார். பிரேமலதாவின் செயலுக்கு பலரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். 

இதையும் படிங்க: பூரண மதுவிலக்கு... ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!! தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அன்புமணி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share