எடப்பாடி குறித்து நான் அப்படி பேசல! விளக்கம் கொடுத்த பிரேமலதா... விமர்சிக்கும் இணையவாசிகள்
எடப்பாடி பழனிச்சாமி குறித்து தான் அப்படி பேசவில்லை என்று பிரேமலதா விளக்கம் அளித்த நிலையில் இணையவாசிகள் விமர்சித்து வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் அண்ணா சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் கடந்த ஆகஸ்டு 7 ஆம் தேதி தேமுதிக பூத் ஏஜென்ட் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், தேமுதிக ஆட்சிக்கு வந்தால் மதுக்கடையில்லாத தமிழகம் உருவாக்கப்படும் என்றும் தே.மு.தி. க நிர்வாகிகள் யார் பெரியவர் என்ற ஈகோவை மறந்து வரும் தேர்தலில் பணியாற்றினால் வெற்றி என்ற மூன்றெழுத்து நமக்கு பரிசாக கிடைக்கும் என்றும் கூறினார்.
தி.மு.தி.க ஆட்சியில் ரேஷன் பொருட்கள் பொதுமக்களின் வீடுகளுக்கு தேடி வரும் என்றும் கூறினார். இந்த கூட்டத்தில், விஜயகாந்த் உயிருடன் இருந்தபோது அவரின் முதுகில் குத்தி விட்டதாகவும் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டு பின்னர் இல்லை என்று துரோகம் செய்துவிட்டதாகவும் எத்தனையோ துரோகிகளை நாம் பார்த்து இருக்கிறோம் எனவும் அவர் பேசியதாக தகவல்கள் வெளியாகின.
ராஜ்யசபா சீட் கொடுக்காததால் அதிருப்தியில் இருந்த பிரேம் லதா இவ்வாறு பேசியதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அவை முற்றிலும் பொய் என பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்தி விட்டதாக தான் கருத்து கூறியதாக வெளியான தகவல் பொய் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: “நான் எப்ப அப்படி சொன்னேன்?” - அந்தர் பல்டி அடித்த அண்ணியார் பிரேமலதா விஜயகாந்த்... எடப்பாடி விவகாரத்தில் உல்ட்டா...!
அந்த வார்த்தை தனது வாயில் வரவே வராது எனவும் கூறினார். கட்சி நிர்வாகிகளுக்கு பேசுவதை தான் பேசியதாக போடுவது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும் நான் சொல்லாததை சொல்லியவாறு போட்டால் இதை பத்திரிகையாளர்களை சந்திக்க மாட்டேன் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த நிலையில், ராஜ்ய சபா சீட் கொடுக்காததால் பிரேமலதா இவ்வாறு பேசிவிட்டார் என்றும் எடப்பாடி பழனிச்சாமி விமர்சிக்கும் பிரேமலதா, கொள்கை அல்லாமல் பதவிக்காக கூட்டணி வைக்கிறார் என்ற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தங்கள் கட்சி வளர்ச்சியே முக்கியம் என்ற பிரேமலதா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது
இதையும் படிங்க: எடப்பாடி பழனிச்சாமி முதுகில் குத்திட்டார்… ஏமாந்துட்டோம்! ஆதங்கத்தை கொட்டித் தீர்த்த பிரேமலதா