“ரீல் லைப்... ரியல் லைப்...” - மக்கள் ஹீரோவாக சி.எம். விஜய்க்கு பிரேமலதா கொடுத்த அட்வைஸ்...!
முதல்வர் விஜய்ரீல் லைப்பில் சொன்னதை ரியல் லைப்பில் செய்தால்தான் ஹீரோவாக மக்கள் பார்ப்பார்கள்.
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தார் அவருக்கு
திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் அக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சட்டமன்றத் தேர்தலின் போது வேண்டுதல் நிறைவேற்றும் வகையில்முருகப்பெருமானுக்கு 6அடி உயரம் கொண்ட வெள்ளி வேல் காணிக்கை வழங்கி சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து தங்க தேர இழுத்து வேண்டுதல் நிறைவேற்றினார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பழனியில் ரூ.100 கோடி முருகன் கோவில் நிலம் அபகரிப்பு தொடர்பாக தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். கோயில்களை பொறுத்தவரை பக்தர்களை குடிநீர் உணவு பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும். முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் இரவோடு இரவாக அதிரடி கைது நடவடிக்கை தேவையற்றது. இது போன்ற கைது நடவடிக்கைகள் முதலமைச்சர் மீது பொதுமக்களிடையே எதிர்மறைவான தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதையும் படிங்க: "விவசாயிகளின் ரத்தத்தை உறிஞ்சும் தவெக அரசு"..! ஊழல் ஆட்சி..!!கொந்தளித்த திமுக..!!
டெல்லியில் மத்திய கல்வி அமைச்சருக்கு கதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களின் உணர்வுகளை மத்திய மாநில அரசுகள் மதித்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா சம்பவம் தொடர்பாக முதல் முதலில் குரல் கொடுத்தேன். எதைப் பார்த்து சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்கிறார்கள். இதில் குதிரை பேரம் நடக்கிறதா?, பணம் பதவியை பார்த்து எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்கிறார்களா? என்ற மிகப்பெரிய கேள்வி ஒட்டுமொத்த தமிழக மக்களிடையே இருக்கிறது.
தமிழகத்தில் தொடர்ந்து மின்வெட்டு அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வை உடனடியாக தமிழக முதல்வர் திரும்ப பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றும் வகையில் விவசாயிகள் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்து ரீல் லைப்பில் சொன்னதை ரியல் லைப்பில் நிரூபிச்சா தான் அவரை ஹீரோவாக மக்கள் பார்ப்பார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பாடகர் அறிவுவின் அதிரடி போராட்டம்... கைதுக்குப் பிறகு முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு..!!