சீமான் சொல்றது 100க்கு100 உண்மை... விஜய் பற்றிய விமர்சனத்தை ஆதரித்த பிரேமலதா விஜயகாந்த்!
விஜயகாந்தை அண்ணன் என்று விஜய் குறிப்பிட்டு பேசியதை விமர்சித்த சீமானின் கருத்து உண்மை என பிரேமலதா தெரிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரப்பத்தியில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த மாநாட்டில் அலை கடலென தொண்டர்கள் கலந்து கொண்டனர். இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார். அப்போது, வீரம் விளையும் மதுரை மா மண்ணை வணங்குவதாக தெரிவித்தார். தனக்கு எம்ஜிஆர் உடன் பழகும் வாய்ப்பு கிடைக்கவில்லை ஆனால் விஜயகாந்துடன் பழகும் வாய்ப்பு அதிகமாக கிடைத்ததாக தெரிவித்தார். மேலும், விஜயகாந்தை எனது அண்ணன் என குறிப்பிட்ட பேசினார்.
விஜயகாந்த் தனது அண்ணன் என்று விஜய் குறிப்பிட்டு பேசியதை பற்றி பிரேமலதா விளக்கம் அளித்தார். விஜய் எங்களுக்கு தம்பி தான் என்றும் இது அரசியலுக்குப் பிறகு வந்தது அல்ல என்றும் கூறினார். விஜயகாந்த் திரைத்துறையில் வந்ததில் இருந்து தொடர்கிறது என்றும் தே.மு.தி.க. தற்போது எந்த கட்சியுடனும் கூட்டணியில் இல்லை எனவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், விஜயகாந்தை அண்ணன் என விஜய் கூறிய கருத்தை சீமான் விமர்சித்தார். அவர் உடல்நிலை சரியில்லாத போதும் கட்சி தொடங்கிய போதும் அண்ணன் என்று சொல்லிக் கொண்டு வராத விஜய், தற்போது மட்டும் விஜயகாந்த் அண்ணன் என கூறிக் கொள்வதாக விமர்சித்திருந்தார். சீமான் கருத்தை பிரேமலதா விஜயகாந்த் ஆமோதித்துள்ளார். விஜய் எங்களுக்கு தம்பி தான்., இருப்பினும் அப்போதெல்லாம் வராத விஜய் இப்போது வருகிறார் என்று உண்மையை சீமான் உரக்கச் சொல்லி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ஜெ. படத்துடன் பிரேமலதா... இதுக்கு தான் அப்படி போட்டேன்! L.K.சுதீஷ் விளக்கம்..!
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் தேமுதிக...முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முக்கிய அறிவிப்பு