தேமுதிகவுக்கு 6 சீட்டா? இத சொன்ன கட்சிக்கு அழிவுகாலம்... சாபமிட்ட பிரேமலதா...!
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கூட்டணி குறித்த முடிவை இன்னும் இறுதி செய்யாமல் இருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று, கட்சியை வழிநடத்தி வருகிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, அந்தக் கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று ஆரம்பத்தில் அறிவித்திருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இப்போது அந்த முடிவு தாமதமடைந்து, கட்சி நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துள்ளது. முதலில், 2024 தேர்தலின்போது அதிமுகவுடன் கூட்டணி உறுதிப்படுத்தப்பட்டபோது, தேமுதிகவுக்கு ஐந்து நாடாளுமன்றத் தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் வழங்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டதாக பிரேமலதா கூறியுள்ளார்.
ஆனால், ராஜ்யசபா சீட்டு உடனடியாக வழங்கப்படாமல் 2026-க்கு ஒத்திவைக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால், ஜூன் 2025-இல் பிரேமலதா விஜயகாந்த் கடும் அதிருப்தி தெரிவித்தார். அதிமுக தரப்பில் கூட்டணி தொடரும் என்று கூறினாலும், தேமுதிக தரப்பில் இது தேர்தல் நோக்கிலான அறிவிப்பு என்று கருதி, கூட்டணி குறித்த இறுதி முடிவை 2026 ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடக்கும் கட்சி மாநாட்டில் அறிவிப்போம் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: அறிவாலயத்தில் தேசியக் கொடி ஏத்தாதவங்க திமுக... காந்திய பத்தி பேசுறாங்க... தமிழிசை விமர்சனம்...!
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு ஆறு சீட்டுகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக பேசப்பட்டது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பதிலளித்த அவர், தேமுதிகவிற்கு ஆறு சீட்டுகள் என்பதை பாஜக மற்றும் அதிமுக தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று கேள்வி எழுப்பினார். இந்த தகவலை பரப்பிய கட்சிக்கு அழிவு காலம் நெருங்கி விட்டதாகவும் பேசினார். கூட்டணி குறித்து நல்ல முடிவு எடுத்து தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: என்ன சமரசமா? மீண்டும் NDA கூட்டணியா? டிடிவி தினகரன் நச் பதில்...!