யாருடன் கூட்டணி? திமுகவுடன் பேச்சுவார்த்தையா? பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்..!
திமுக மற்றும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெற்றதா என்பது குறித்து பிரேம்லதா விஜயகாந்த் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் கூட்டணி குறித்த முடிவை இன்னும் இறுதி செய்யாமல் இருப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்று, கட்சியை வழிநடத்தி வருகிறார்.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக, அந்தக் கூட்டணியை 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் என்று ஆரம்பத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் இப்போது அந்த முடிவு தாமதமடைந்து, கட்சி நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் நிலைக்கு வந்துள்ளது.
யாருடன் கூட்டணி என்பது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்திடம் ஏற்கெனவே கேள்வி எழுப்பப்பட்டது. யாருடன் கூட்டணி என்பதை தானே அழைத்து அறிவிப்பேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், தேமுதிகவின் 25 ஆம் ஆண்டு கொடி நாளை ஒட்டி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
இதையும் படிங்க: விஜய் பங்கேற்கும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி..! நுழைவு சீட்டு இல்லைனா வராதீங்க..! கட்சித் தலைமை கறார்..!
அப்போது, தொண்டர்கள் விரும்பும் கட்சி உடன் தேமுதிக கூட்டணி அமைக்கும் என தெரிவித்தார். இரு கட்சிகளுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடப்பதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். திமுக மற்றும் அதிமுக, பாஜக என அந்தந்த கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பேச்சுவார்த்தை தொடர்பாக ஏற்கனவே விளக்கம் அளித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: களமாடும் பாஜக... நயினார் தலைமையில் தேர்தல் மேலாண்மை குழு... தேர்தல் பணிகள் தீவிரம்..!