×
 

மேகதாது விவகாரத்தில் அதிருப்தி..! மத்திய அரசு நிலைப்பாட்டை எதிர்த்த முதல்வர் விஜய்..! பிரதமர் மோடிக்கு கடிதம்..!!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, காவிரி ஆற்றின் மேகதாது பகுதியில் கர்நாடகா அணை கட்டும் திட்டத்துக்கு எதிராக உறுதியான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய நீர்வளத் துறை இணையமைச்சர் ராஜ் பூஷண் சவுத்ரி அளித்த பாராளுமன்ற பதிலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் விஜய் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இது தமிழ்நாட்டின் விவசாயிகளின் உரிமைகளையும், காவிரி நீர் பங்கீடு தொடர்பான சட்டப்பூர்வ தீர்ப்புகளையும் பாதுகாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். 

கர்நாடகா அரசு மேகதாதுவில் சமன் நீர்த்தேக்க அணை (balancing reservoir) கட்ட திட்டமிட்டுள்ளது. இது கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கும், நீர் ஒழுங்குமுறைக்கும் உதவும் என்று அந்த மாநிலம் வாதிடுகிறது. ஆனால் தமிழ்நாடு இதை கடுமையாக எதிர்க்கிறது.

இந்த திட்டம் காவிரி நடுவர் மன்றத்தின் 2007 இறுதி தீர்ப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் 2018 தீர்ப்பை மீறும் என்றும், தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நீர் பங்கை பாதிக்கும் என்றும் வாதிடப்படுகிறது. காவிரி படுகை ஏற்கெனவே பற்றாக்குறை படுகையாக அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிய பெரிய திட்டங்கள் அனுமதிக்கப்படக்கூடாது என்பது தமிழ்நாட்டின் முக்கிய வாதம். 

இதையும் படிங்க: ஒவ்வொரு இந்தியருக்கும் மகிழ்ச்சி...! வெள்ளிப் பதக்கத்தை வென்ற தமிழக வீரர்... பிரதமர் மோடி வாழ்த்து..!!

மேகதாது விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில், தமிழக அரசின் ஒப்புதலை பெற வேண்டாம் என்ற மத்திய நீர்வளத்துறை அமைச்சரின் பதில் அதிருப்தி அளிக்கிறது என்ன தெரிவித்துள்ளார். மத்திய அரசு தனது நிலைப்பாட்டை திரும்ப பெற வேண்டும் என கூறினார். நீர்வளத்துறை அமைச்சர் தனது பதிலை திரும்ப பெற வேண்டும் என்றும் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: வெடித்தது போராட்டம்... மாறியது அரசியல் களம்... வருத்தம் அடைவதாக தர்மேந்திர பிரதான் உருக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share