×
 

வெள்ளை வேட்டி சட்டையில் கலக்கலாக வந்த பிரதமர் மோடி..!! புதிய முனையக் கட்டடம் திறந்து வைப்பு..!

தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

மாலத்தீவு, பிரிட்டனுக்கு 4 நாட்கள் பயணமாக சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாட்கள் பயணமாக இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ளார். இரவு 7 மணியளவில் தனி விமானம் மூலமாக தூத்துக்குடி விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமரை அமைச்சர் தங்கம் தென்னரசு, ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், ராம் மோகன் நாயுடு உள்ளிட்டோர் வரவேற்றனர்.

தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, ரூ.452 மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்ட புதிய முனையக் கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, சுமார் ரூ.4800 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார். முன்னதாக தூத்துக்குடி வந்துள்ள பிரதமர் மோடிக்கு வள்ளுவர் கோட்டம் மாதிரியை பரிசாக வழங்கினார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. 

இதையும் படிங்க: விண்ணை பிளந்த 'மரியே வாழ்க'.. தூத்துக்குடி பனிமய மாதா ஆலய பெருவிழா கோலாகல தொடக்கம்..!!

இதில், ரயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் ரூ.1,030 கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலைத்துறையில் முடிக்கப்பட்டுள்ள ரூ.2,571 கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகியவை அடங்கும்.

இந்நிகழ்வை முடித்த பின்னர் இரவு 10.30 மணி அளவில் தனி விமானம் மூலம் தூத்துக்குடியில் இருந்து திருச்சிக்கு செல்கிறார். அங்கு ஆட்சியர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் ஓய்வெடுக்கும் அவர், நாளை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடக்கும் ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்கிறார். அங்கு ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை அவர் வெளியிடுகிறார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பிரதமரின் வருகை தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமரின் வருகையின்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்திப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்த சந்திப்பு அதிமுக-பாஜக இடையேயான உரசல்களுக்கு தீர்வாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.

இந்த சந்திப்பு பின்னர் கூட்டணி ஆட்சி பஞ்சாயத்துகள் முடிவுக்கு வரும் என்றும், எடப்பாடியின் இரண்டாம் கட்ட பிரச்சார பயணத்தின் திட்டம், அதில் பங்கேற்கும் பாஜக தலைவர்கள் குறித்தும் சில மாற்றங்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
 

இதையும் படிங்க: நாளை தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி.. காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share