“தனியார் பேருந்துகளிலும் வெற்றி பயணத் திட்டம்”... சி.எம். விஜய்க்கு கண்ணீர் மல்க பறந்த கோரிக்கை... செவி சாய்க்குமா அரசு?
இதன் காரணமாக தனியார் பேருந்துகள், பயணிகள் இல்லாததால் பயணத்தை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .
கடந்த இரண்டாம் தேதி முதல் தமிழகத்தில் தொடங்கப்பட்ட வெற்றிப் பயணம் திட்டத்தினால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்து தொழிலாளர்கள் கவலை. கண்ணீர்.
கடந்த இரண்டாம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளில் தமிழக அரசு குறிப்பிட்ட அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியது .
புறநகர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்ற நடைமுறை காரணமாக பெண் பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர் .
பெண் பயணிகளுடன் வரும் ஆண்களும் அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .
இதையும் படிங்க: 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை... தமிழ்நாடு அரசு கப்சிப்..! வேல்முருகன் கண்டனம்..!!
இதன் காரணமாக தனியார் பேருந்துகள், பயணிகள் இல்லாததால் பயணத்தை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை மார்க்கமாகவும், ஜெயங்கொண்டம் மார்க்கமாகவும் செல்லும் பெரும்பாலான அரசு பேருந்துகள் வெற்றிப் பயணம் என்ற திட்டத்தில் இயங்குவதால் இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது .
குறிப்பிட்ட பயணிகள் இருந்தால் மட்டும் பேருந்தை இயக்க உரிமையாளர்கள் கூறுவதால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தனியார் பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்களும் நடத்துனர்களும் கவலை தெரிவிக்கின்றனர் .
சில நேரங்களில் தொடர்ச்சியாக அரசு பேருந்துகளில் வெற்றிப் பயணம் பேருந்துகள் செல்வதால் தனியார் பேருந்துகளில் பயணிகள் இன்றி காணப்படுகிறது
சில நேரங்களில் தனியார் பேருந்துகளில் பயணிகள் இல்லாததால் அந்த ட்ரிப் நிறுத்தப்படுவதாகவும் அதனால் தங்களது வாழ்வாதாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என தனியார் பேருந்துகளில் ஓட்டுனர்கள் , நடத்துனர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு,
அரசு பேருந்துகளுக்கு வெற்றிப் பயணம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மானியத்தை தனியார் பேருந்துகளுக்கும் வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு வழங்கினால் தனியார் பேருந்துகளும் பெண்களை இலவசமாக அழைத்துச் செல்ல முடியும் .
தமிழக அரசு விரைவில் தங்களது வாழ்வாதாரத்தை காப்பாற்றும் வகையில் நல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தனியார் பேருந்து தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
இதையும் படிங்க: கம்பீர அணிவகுப்பு மரியாதை... காவல் அதிகாரிகளின் அணிவகுப்பை ஏற்ற முதல்வர் விஜய்..!