தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் 2வது நாளாக தொடரும் சோதனை... சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!
பிரபல சினிமா பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற வருகிறது.
நானும் ரவுடிதான், அமரன் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆகாஷ் பாஸ்கரன் தற்போது டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலமாக படங்கள் தயாரித்து வருகிறார். தனுஷ் நடித்து, இயக்கி வரும் இட்லி கடை படம்தான் அவரது தயாரிப்பில் வெளிவர இருக்கும் முதல் படம்.
மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் ஆகியோர் நடித்து வரும் பராசக்தி படத்தையும் தயாரிக்கிறார். ஆகாஷ் பாஸ்கரன். இது மட்டுமல்லாது பல பிரபலமான நடிகர் நடிகைகளின் படத்தையும் தயாரித்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிமுக மாஜி. அமைச்சர் வீட்டில் ரெய்டு.. காலை முதலே லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி..!
இந்த நிலையில் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதனிடையே இரண்டாவது நாளாக அவரது வீட்டில் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் முறைகேடு..! விசாகனை விசாரணைக்கு அழைத்துச் சென்றது அமலாக்கத்துறை..!