×
 

பாதி வழியிலேயே நிறுத்தம்; திருப்பி அனுப்பப்படும் சுற்றுலா பயணிகள் - தொட்டபெட்டாவில் பரபரப்பு!

தொட்டாபெட்டா மலைசிகரத்தில் ஒற்றை காட்டு யானை முகாமிட்டுள்ளதால் தொட்டபெட்டா காட்சிமுனை தற்காலிகமாக மூடபட்டுள்ள நிலையில் தொட்டபெட்டாவை காண வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கபட்டு வருகின்றனர். 

குன்னூர் மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்த ஒற்றை காட்டுயானை தொட்டபெட்டா காட்சி முனை பகுதிக்கு நேற்று மாலை வந்தது. சுமார் 15 கிராமங்களை தாண்டி இந்த யானை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அந்த யானையை மீண்டு குன்னூர் வழியாக வன பகுதிக்குள் விரட்ட குன்னூர், உதகை வனசரகத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் முயன்றனர். ஆனால் அந்த காட்டு யானை குன்னூர் மலைப்பாதை வழியாக செல்லாமல் உதகை நகருக்குள் வந்தது.

நகரில் புகுந்த ஒற்றை யானையை விரட்ட இரவு முழுவதும் வனத்துறையினர் போராடிய நிலையில் அந்த யானை மீண்டும் தொட்டபெட்டா காட்சிமுனைக்கு சென்று தஞ்சமடைந்துள்ளது.  இதனையடுத்து அந்த யானையை விரட்டும் பணி நடைபெற உள்ளதாலும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதியும்  இன்று ஒருநாள் தொட்டாபெட்டா காட்சிமுனைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கபடுவதாக உதகை வடக்கு வன கோட்டை வனத்துறையினர் அறிவித்து தொட்டபெட்டா செல்லும் சாலையை மூடி உள்ளனர்.

இதனை அடுத்து காலை முதலே தொட்டபெட்டா காட்சி முறையை காண ஆர்வத்துடன் வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கோத்தகிரி சாலை சந்திப்பிலேயே திருப்பி அனுப்பி வைக்கபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: அமைச்சர் பி.டி.ஆர் கார் மீது செருப்பு வீசிய பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை..! 3 பேர் சரண்..!

இதனால் உதகை சுற்றி பார்க்க வந்துள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் முடியாமல் திரும்பி செல்லும் நிலை காணபடுகிறது. இதனிடை தொட்டபெட்டா மலை சிகர வனபகுதியில் முகாமிட்டுள்ள ஒற்றை யானையை டுரோன் கேமரா மூலம் தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 1000 டாலர் தர்றேன்.. தயவு செஞ்சு கிளம்புங்க..! சட்டவிரோத குடியேறிகள் வெளியேற அதிபர் ட்ரம்ப் சலுகை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share