×
 

எங்களுக்கு 'கரகாட்டக்காரன்' பட டிரஸ் போட்டே ஆகனும்... உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவு...!

கரகாட்டம் ஆடும் கலைஞர்கள் 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில் வருவது போன்ற கண்ணியமான உடைகளை அணிய. (proper dress code as displayed in Tamil Movie- 'Karagattakaran') வேண்டும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

கரகாட்டம் தமிழ் இசையுடன்  வண்ணமயமான ஆடைகள்,அணிந்து நேர்த்தியான உடல் அசைவுகளை உள்ளடக்கியது. எனவே, இந்தக் கலை வடிவம் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தில் ஆழமாக வேரூன்றியுள்ளது என நீதிபதி கருத்து.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அடுத்த மேலகரத்தைச் சேர்ந்த  கணேசன்  என்பவர் தாக்கல் செய்த மனுவில், எங்கள் ஊரில் முப்பிடாதி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கரகாட்டம் நடத்த அனுமதி மற்றும் போலீஸ் பாதுகாப்பு கோரி காவல்துறையிடம் மனு அளித்திருந்தேன். காவல்துறை இதற்கு அனுமதி மறுத்து விட்டனர். எனவே கரகாட்டம் நடத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது  அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சமீபகாலமாக கரகாட்டம் என்ற பெயரில் ஆபாசமான 'ஆடல் பாடல்' நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: திக்... திக்...!! - இளைஞரை ஓட விட்டு துள்ளத்துடிக்க வெட்டிய 6 பேர்... சிவகாசியே நடு நடுங்கிய பயங்கரம்...! 

இதனையடுத்து நீதிபதி பிறபித்த உத்தரவில், கரகாட்டம் என்பது தமிழகப் பண்பாட்டின் மிகச்சிறந்த நடன கலை. கரகாட்டம்' என்று அழைக்கப்படும் இந்த பாரம்பரிய நாட்டுப்புற நடனம் தமிழ்நாடு மாநிலத்தில் மிகவும் பிரபலமானது. 

இது மழைக்கடவுளான  மாரியம்மனுக்கு நேர்த்திக்கடனாக ஆடப்படுகிறது. இந்த நடனத்தின் சிறப்பம்சமே, நடனக் கலைஞர் தனது தலையில் பானைகள் அல்லது செம்புகளைச் சுமந்து கொண்டு, கீழே விழாமல் சமநிலைப்படுத்தி இசைக்கு ஏற்றார் போல் ஆடும் சிக்கலான உடல் அசைவுகளாகும். இதற்கு மிகப்பெரிய திறமையும், ஒருமுகப்படுத்தப்பட்ட கவனமும் தேவைப்படுகிறது.

கரகாட்டம் ஆடும் கலைஞர்கள், புகழ்பெற்ற 'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில் வருவது போன்ற கண்ணியமான உடைகளை அணிய வேண்டும். எனவே மனுதாரர்  கரகாட்டம் நடத்த 
காவல்துறையிடம் புதிய மனு அளித்து அனுமதி  பெற்றுக் கொள்ளலாம்.  'கரகாட்டக்காரன்' திரைப்படத்தில்வருவது போன்ற ஆடைகள் அணிந்து கொள்ள வேண்டும்.(proper dress code as displayed inTamil Movie- 'Karagattakaran') மேலும் இரவு ஏழு மணியிலிருந்து பத்து மணிக்குள் நடத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: ஊட்டி போறீங்களா? இதை தெரிஞ்சுகாமா போகாதீங்க.. உதகை - குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை முக்கிய அப்டேட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share