நினைத்ததை செய்ய முடியல..! பரப்புரையில் PTR பழனிவேல் தியாகராஜன் வருத்தம்..!!
சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மீண்டும் மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பைத் தேடி, தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், தனது அரசியல் பாரம்பரியத்தையும் நவீன அணுகுமுறையையும் இணைத்து, மக்களிடம் நெருங்கி செல்லும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். 2016 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக மதுரை மத்தியில் திமுக சார்பில் களமிறங்கிய PTR, சுமார் 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2021 தேர்தலில் அந்த வெற்றியை இன்னும் பெரிதாக்கி, சுமார் 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் மீண்டும் வென்று, இரண்டாவது முறையாக எம்.எல்.ஏ. ஆனார். இப்போது 2026 தேர்தலில் ஹாட்ரிக் வெற்றியை நோக்கமாகக் கொண்டு அவர் செயல்பட்டு வருகிறார்.
இதையும் படிங்க: PTR-க்கு டெல்லியில் கூட ரசிகர்கள்...! சம்மந்தமே இல்லாத வேட்பாளர் அவரு... சுந்தர் சி-யை விமர்சித்த கனிமொழி..!!
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். மதுரைக்கு எவ்வளவோ செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன், ஆனால் நினைத்த எதையும் என்னால் செய்ய முடியவில்லை என்று கூறினார். அதற்கு பல காரணங்கள் இருக்கலாம், ஆனால் அரசியலில் இருப்பவர்களால் அதிகம் வெளிப்படையாக பேச முடியாது என்று மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜன் பரப்புரையின்போது கூறியுள்ளார்.
இதையும் படிங்க: குப்பை அள்ளுவதில் கூட ஊழல்..! கையாலாகாத திமுக அரசு... முதல்வரை வெளுத்த அண்ணாமலை..!