திமுகவில் ஐக்கியமாக காத்திருக்கும் முக்கிய அதிமுக புள்ளிகள்... இபிஎஸை டரியல் ஆக்கிய ஆர்.எஸ்.பாரதி...!
எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் முடிந்ததும் அதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவில் ஐக்கியம் ஆவார்கள்.
நெல்லை மத்திய மாவட்ட திமுக சார்பில் நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் வார்ரும் திறப்பு விழா நடைபெற்றது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் எம்எல்ஏ அப்துல் வகாப் தலைமை வகித்தார். திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஆர் எஸ் பாரதி கூறியதாவது, எடப்பாடி பழனிச்சாமி சறுக்கி விழுந்து பல மாதங்கள் ஆகிவிட்டது. அவர் இனிமேல் எந்திரிக்க முடியாது. அவர் சரக்கு மரம் ஏறிவிட்டார்.
இறங்குவது எப்படி என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார். திமுக கூட்டணி உடைந்து விடும் என 2019ல் இருந்து சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: வீட்டுக்கு அனுப்புவாங்க... ரெடியா இருங்க! திமுகவை விமர்சித்த அதிமுக
அதிமுக கூட்டணியிலிருந்து ஒவ்வொருவராக உருவி கொண்டிருக்கிறார்கள். அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவராக திமுகவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
திமுக கூட்டணி மிகவும் பலமாக உள்ளது. திமுகவின் பலம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமியின் இந்த சுற்றுப்பயணம் முடிந்தவுடன் மேலும் சிலர் திமுகவிற்கு வந்து விடுவார்கள்.
எங்கள் கட்சிக்கு வருவோருக்கு இடம் கொடுக்க முடியவில்லை. எங்கள் கட்சிக்கு வந்தவரை என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறோம்.
பாராளுமன்ற தேர்தலின் போது 8 முறை பிரதமர் வந்தார். 40க்கும் 40 நாங்கள் வெற்றி பெற்றோம். பத்து முறை வந்தால் 234 தொகுதியிலும் நாங்களே வெற்றி பெறுவோம் என்று கூறினார்.
இதையும் படிங்க: நாளை முதல் ஆட்டம் ஆரம்பம்! எடப்பாடியின் அடுத்த கட்ட நகர்வு…குஷியில் தொண்டர்கள்