×
 

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியா..? எகிறும் எதிர்ப்பார்ப்புகள்... DOT வைத்த ராகவா லாரன்ஸ்..!!

திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக ராகவா லாரன்ஸ் விளக்கம் கொடுத்தார்.

தமிழக அரசியலில் சமீப காலமாக அதிகம் பேசப்படும் ஒரு விவகாரமாக திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் மாறியது. முதலமைச்சர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சிக்கு என இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், திருச்சி கிழக்கு தொகுதியில் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததால் ஏற்பட்ட இந்த இடைத்தேர்தல், தமிழக வெற்றி கழகத்திற்கு ஒரு முக்கிய சோதனையாகவும், எதிர்க்கட்சிகளுக்கு சவாலாகவும் கருதப்படுகிறது.

இந்த பின்னணியில், பிரபல நடிகர், இயக்குநர் மற்றும் சமூக சேவகரான ராகவா லாரன்ஸ் தவெக சார்பில் இந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என்கிற தகவல் கடந்த சில வாரங்களாக பரவலாகப் பேசப்பட்டு வந்தது. முதலமைச்சர் விஜய்யின் திட்டமாகவும், தவெகவின் மாஸ்டர் பிளானாகவும் இதனை கூறி வந்தனர். ராகவா லாரன்ஸின் சமூக சேவைப் பணிகள், மக்கள் மத்தியில் அவருக்கு உள்ள நல்ல மதிப்பு மற்றும் விஜய்யுடனான நெருக்கம் ஆகியவை இந்த ஊகத்துக்கு வலு சேர்த்தன. லாரன்ஸ் ஏற்கெனவே தவெகவுக்கு ஆதரவாக பதிவுகள் செய்திருந்ததும், அவரது அரசியல் ஆர்வத்தை முன்னுக்கு கொண்டு வந்தது.

ராகவா லாரன்ஸ் இந்த ஊகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் முதல் வாரத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் செய்திகள் பரவுவதாகக் குறிப்பிட்ட அவர், தனது படப்பிடிப்பு முடிந்த பின்னர் ஜூன் 11 அன்று காலை 9.30 மணிக்கு தனது வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவை அறிவிப்பதாக தெரிவித்தார். “அம்மாவின் ஆசியுடன்” என்கிற வார்த்தைகளைப் பயன்படுத்திய அவரது பதிவு, #Mattram மற்றும் #Serviceisgod என்ற ஹேஷ்டேக்குகளுடன் வெளியானது. இது அரசியல் நுழைவு குறித்த ஊகங்களை மேலும் அதிகரித்தது.

இதையும் படிங்க: தமிழக சட்டசபை: 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தயாரிப்புகள் தீவிரம்..!! தேதி அறிவிப்பு எப்போது..??

அவர் தவெக சார்பில் திருச்சி கிழக்கில் நிற்கலாம் என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்தது. திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா என்பது குறித்து ராகவா லாரன்ஸ் விளக்கம் கொடுத்துள்ளார். திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டேன் என நடிகர் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். ஆசைக்காக அரசியலுக்கு வரமாட்டேன் என்றும் மக்களுக்காக தான் அரசியலுக்கு வருவேன் என்றும் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: "சூடுபிடித்தது தேர்தல் களம்!": 5 தொகுதி இடைதேர்தல் பணிகளை தொடங்க அர்ச்சனா பட்நாயக் உத்தரவு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share