×
 

சட்டமன்றத்தில் பேசினால் தப்பா..? ஜனநாயக படுகொலை..! ரகுபதி காட்டம்..!!

கே. என். நேரு விவகாரம் குறித்து முன்னாள் அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத் துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. கே.என்.நேரு சட்டமன்றத்தில் பேசியபோது, தனது வீட்டைத் தானே சுத்தம் செய்யத் தேவையில்லை என்றும், லஞ்ச ஒழிப்புத் துறையே அடிக்கடி வந்து தனது வீட்டைச் சுத்தம் செய்துவிடுவதாகவும் நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

இந்தப் பேச்சை அடுத்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த ரகுபதி, நேரு சட்டமன்றத்தில் அவ்வாறு பேசியதில் எந்தத் தவறும் இல்லை என்று தெளிவுபடுத்தினார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் தங்கள் கருத்துகளைத் தைரியமாக வெளிப்படுத்துவது ஜனநாயகத்தின் அடிப்படை அம்சம் என்றும், அதற்குத் தடை விதிக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், தற்போதைய தவெக அரசு எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் வகையில் செயல்பட்டு வருவதாகவும், இது ஜனநாயகப் படுகொலைக்குச் சமமானது என்றும் ரகுபதி குற்றம் சாட்டினார். சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவதும், அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பதும் எதிர்க்கட்சியின் கடமை என்பதை நினைவுபடுத்தி உள்ளார்.

இதையும் படிங்க: நேருவை குறிவைக்கிறதா தவெக! 19 இடங்களில் நடக்கும் சோதனை! கனிமொழி எம்.பி காட்டமான பதிலடி!

இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கலாகவே பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார். நேருவின் பேச்சு சட்டமன்ற உரிமையின் வெளிப்பாடு என்றும், அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிரானவை என்றும் அவர் கருத்து தெரிவித்தார்.

 

 

இதையும் படிங்க: கோடிக்கணக்குல ஏமாத்திட்டாருங்க!! துரைமுருகன் மீது புகார் சொன்ன திமுக நிர்வாகி! கட்சியில் இருந்து சஸ்பெண்ட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share