பிரதமரை மந்திரவாதி எனக் கூறுவதா..? ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்..!!
மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத் தொடர் ஏப்ரல் 16 ஆம் தேதியான இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு அமர்வு முக்கியமாக தொகுதி மறுவரையறை, மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றை அமல்படுத்துவதற்கான மசோதாக்களை மையமாகக் கொண்டு நடைபெறுகிறது.
மத்திய அரசு இந்த மசோதாக்களை விரைவாக நிறைவேற்றி, 2029 பொதுத் தேர்தலில் பெண்கள் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த விரும்புகிறது.மூன்று முக்கிய மசோதாக்கள் இந்த அமர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மக்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ராணுவத்தை தாக்கி பேசவில்லை என்றும் நாங்கள் ராணுவ வீரர்களை அவமரியாதை செய்யவில்லை எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
பிரதமரும், பாஜகவும் இந்தியாவின் ராணுவ வீரர்கள் இல்லை என்றும் கூறினார். பிரதமர் மற்றும் பாஜகவை பற்றி ஏதாவது பேசினால் உடனடியாக ராணுவ வீரர்கள் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டி கோழைகள் போல ஒளிந்து கொள்ளாமல் முன்னாள் வந்து சண்டை போடுங்கள் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார். மத்திய அரசு கொண்டுவந்த மசோதாக்களை இங்கேயே தோற்கடிப்போம் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி பேசும் பொழுது பிரதமரை மந்திரவாதி என கூறியதாக சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க: காங்., தலைமை ஓகே சொன்னதால்தான் விஜயை சந்தித்தேன்!! உண்மையை போட்டு உடைத்த பிரவீன் சக்கரவர்த்தி!!
அதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ராஜநாத் சிங் வலியுறுத்தினார். பிரதமரை அவதூறாக பேசிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ராகுல் காந்தியின் பேச்சுக்கு மத்திய அமைச்சர்கள் ராஜநாத் சிங் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி அவமரியாத அவமரியாதையாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.
இதையும் படிங்க: சின்ன தோசைக்காக கல்யாண விருந்தை தவறவிட்ட காங்.,!! முடிந்துபோனதை கிளறும் பிரவீன் சக்கரவர்த்தி!