காலையிலேயே அதிரடியாக ரெய்டு... சென்னையில் சல்லடை போடப்படும் அதிமுக்கிய இடங்கள் ... பரபரப்பு காரணம்...!
சென்னையில் ஜாகர்சாதி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வருமானவரித்துறை அதிகாரிகள் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் இன்று காலை முதல் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் தேர்தல் பறக்கும் படையினரோடு ஒரு அதிரடி சோதனை ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சென்னை எழும்பூரில் அமைந்திருக்கக்கூடிய ஜேஎஸ்எம் விடுதி, அண்ணாசாலையில் இருக்கக்கூடிய ஒரு விடுதி மற்றும் தற்போது எத்திராஜ் கல்லூரி அருகே இருக்கக்கூடிய ஜேஎஸ்எம் விடுதியின் தலைமை அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமானவருத்துறை அதிகாரிகள் தேர்தல் பறக்கும் பறக்கும் படையினரோடு இணைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக இந்த சோதனையானது ஜாபர் சாதிக் என்பவருக்கு சொந்தமான விடுதிகள் எனவும், அவர் தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் தற்போது அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். குறிப்பாக பட்டினம்பாக்கத்தில் அமைந்துள்ள ஜாபர் சாதிக் என்பவரது வீட்டிலும் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதே போன்று அவருக்கு சொந்தமான ஜேஎஸ்எம் ரெசிடென்சியின் தலைமை அலுவலகம், எழும்பூரில் அமைந்திருக்கக்கூடிய ஜேஎஸ்எம் விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனையான நடைபெற்று வருகிறது. இந்த ஜாபர் சாதிக் என்பவர் கடந்த 2024ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய போதை பொருள் கடத்தல் வழக்கில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர். அதன் பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளாலும் கைது செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா..!! பணமோசடி வழக்கு: ரிலையன்ஸ் நிறுவனத்தில் ED அதிரடி ரெய்டு..!!
இவர் மீது தற்போது வரை இந்த வழக்கானது நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் இணைந்து இந்த சோதனை ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக பணப்பட்டுவாடா செய்வதற்காகவோ அதற்காக பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது இந்த சோதனையானது கூட்டு முயற்சியாக நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த சோதனையானது இன்னும் பல்வேறு இடங்களுக்கு அதிகரிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது தற்போது வரை சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், ஏதேனும்ஆவணங்கள் மற்றும் பணம் கைப்பற்றப்பட்டால் அதுதொடர்பான முழுமையான தகவல்கள் அனைத்தும் வெளியிடப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கருணாநிதி பற்றி இனியும் பேசினால்... இபிஎஸை நேரடியாக எச்சரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...!