×
 

புயல் வருதா? தற்போதைய நிலவரம் என்ன?... இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவல்...!

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. 

இதன் காரணமாக வரும் நாட்களில் பரவலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது. ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் போன்றவை பல மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

இந்த காற்றழுத்த தாழ் பகுதி வலுப்பெற்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், புயலாக மாறுமா என்பது இன்று தெரியவரும் என இந்திய வானிலை ஆய்வு மையத்தில் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்து இருந்தார்.  இந்த நிலையில், வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தம் வலுப்பெறாமல் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறாமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இதையும் படிங்க: #BREAKING சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!

இதனிடையே காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து விட்டதாகவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியான அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் அலுவலக வாய்ப்பிருப்பதாகவும் இந்திய மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: திடீரென தலைகீழாக மாறிய நிலவரம்... இந்த மாவட்ட மக்களுக்கு வெளியானது பகிரங்க எச்சரிக்கை...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share