×
 

"HIGH ALERT"... ப்ளீஸ் திரும்பி வந்துடுங்க... நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை...!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகை மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் மீனவர்களுக்கு அதி முக்கிய அறிவிப்பு வெளியானது. தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, மெதுவாக மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலின் ஒரு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக வரும் நாட்களில் பரவலாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இன்று ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய லேசானது முதல் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கூறப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: கொட்டி தீர்க்கும் கனமழை... அருவிகளில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்... சுற்றுலா பயணிகளுக்கு தடை...!

இதன்காரணமாக, நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் இன்றைக்குள் கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 

இதையும் படிங்க: கடும் போக்குவரத்து நெரிசல்... ஸ்தம்பித்தது ஜி.எஸ்.டி சாலை... திணறும் மக்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share