×
 

"சென்னையில் கனமழை"..! மக்களே உஷார்... 6 மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்..!!

சென்னை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் தற்போது கோடைக்காலத்தின் இறுதி நாட்களை நெருங்கும் வேளையில், வெப்பத்தின் தாக்கம் மக்களை வாட்டி வதைக்கும் நிலை நிலவி வருகிறது. குறிப்பாக ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் முன்னரே கணித்தபடி, தமிழகத்தில் இயல்பை விட அதிக வெப்பநிலை பதிவாகி வருகிறது. பகல் நேரங்களில் 38 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரிக்கு மேல் செல்லும் வெயில், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு தீவிரமடைந்துள்ளது.

சென்னை உள்ளிட்ட வடக்கு கடலோர பகுதிகளில் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தின் சேர்க்கையால் 'ஹீட் வேவ்' போன்ற உணர்வு ஏற்படுகிறது. இரவு நேரங்களிலும் வெப்பம் குறையாமல் இருப்பதால், உடல் சோர்வு, நீரிழப்பு மற்றும் சுகாதார பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. இந்த வெயிலின் தாக்கத்துக்கு நடுவில், அவ்வப்போது பெய்யும் மழை மக்களுக்கு சற்று நிம்மதியை தருகிறது.

தென்மேற்கு பருவமழை முன்னேற்றம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகம் மற்றும் சில கடலோர பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் நாளை இடி, மின்னல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா..??

விருதுநகர், தென்காசி, நெல்லை, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் வரும் 29ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: ஆபிஸ், ஸ்கூலுக்கு குடை எடுத்துட்டு போக மறக்காதீங்க... இந்த 19 மாவட்டங்களில் 10 மணி வரை மழை பொளக்கப்போகுது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share